Tag Archives: புதுவருட கவிதைகள்

இல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்.. (குவைத் தமிழோசை கவியரங்கம்)

மூப்பில்லா தமிழுக்கும் முடிவில்லா தமிழோசைக்கூட்டத்தின் தலைமைக்கும் கவிவீச்சுள்ள தோழமை உறவுக்கும் எம் பேச்சிற்கு செவிசாய்க்கும் அவைப் பொறுமைக்கும் என் மதிப்பு கூடும் முதல்வணக்கம்.. கை தட்டப் பறக்கும் உள்ளங்கை தூசாக கவலைகள் பரந்து மனசு தமிழால் லேசாகும் நட்பால் நெருங்கநெருங்க அகவேற்றுமை யதுஇல்லாக் காசாகும் சொக்குப்பொடிபோட்டு மயக்கும்தமிழுக்கு ஒற்றுமைஒன்றே மூச்சாகும் – இம் முதல்வெள்ளியின் தருணம் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

முற்றுப்புள்ளி!!

வாழ்க்கை தீரா வெள்ளைப் புடவைக்கு நெற்றியில் ஒரு புள்ளி வேண்டும், குற்றம் இதென்று உணராது நீளும் காதல்கொலைக்கு நிச்சயம் மறுபுள்ளி வேண்டும், வட்டிக் கடனோடு ஓயாத துயருக்கு வரும்புள்ளி மரணமென்றாலும் வேண்டும், குட்டிச்சுவர் மீது உடைகின்ற புட்டிகளில் தேசம் தொலையாத புள்ளியது வேண்டும், வாழ்க்கை வரமாக அமைகின்ற பாடத்தின் அறிவை விற்காத சமப் புள்ளி வேண்டும், … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

7, மறுபடி பிறந்தாலும் அந்தத் தெருவில் பிறக்கவேண்டும்..

ஒரு காலஇடைவெளியின் கண்களோடுத் திறக்கிறது எனக்கான பார்வை.. நெடுங்காலத்திற்குப் பிறகு மீண்டுமந்த பழைய ஊருக்குச் செல்கையில் மரங்கள் வெட்டப்பட்டிருந்தன ஜூலி இறந்துப் போயிருந்தாள் மாடுகள் வளர்ப்பு அறவே அங்கு காணோம் ஆடும் கோழிகளும் கறிக்காக மட்டுமே கொண்டுவரப்பட்டது முருகன் அண்ணன் இறந்துப் போயிருந்தார் இட்டிலி விற்கும் ஐயா காய்கறி மாமா யாருமில்லை அங்கு.. யாருமில்லா அந்தத் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மழை; மழையதை வேண்டு..

மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்; மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை மழையில் நனைந்ததுண்டா நனையாதவர்கள் நனைந்துக் கொள்ளுங்கள்; மழை வரும்போது அண்ணாந்து முத்தமிடுங்கள்.. நாமுண்ணும் ஒவ்வொரு … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..

கவிதை வெளிவராததொரு வலி தெரியுமா? பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல அமரும் மௌனத்தின் கணம் கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு., ஒவ்வொரு வார இதழ்களின் பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப் புரட்டுகையில் தனது கவிதை வெளிவராத இதழ் தீயைப் போலே உள்ளே இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது., … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்