Tag Archives: பெரியவர்

உடம்பொரு ஆயுதம்; ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப்போர் புரிவோம்.. (நிமிடக் கட்டுரைகள்)

உடம்பு ஒரு ஆயுதம். உலகத்தின் அத்தனை அற்புதங்களையும் அடைவதற்கான பலத்தைப் பெற்ற மனிதனுக்கு உடம்பொரு கோவில். உள்ளிருக்கும் ஆன்மச் சக்தியை கடைந்துப் பார்க்கக் கைவரப்பெற்ற கலன் உடம்பு. நினைத்ததை நடத்தவும், கிடைத்ததை பத்திரப்படுத்தவும் உடம்பால் மட்டுமே முடிகிறது. நிலைப்புத் தன்மையில் தோற்றாலும் காலத்திற்கும் வாழ்ந்ததன் சுவடுகளை விட்டுச் செல்ல உடம்பொன்றே சாகும்வரை உதவுகிறது. இயற்கையின் ரகசியங்களை … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிந்தவர்ப் பற்றி, பிரியாதிருக்க..(நிமிடக் கட்டுரைகள் 13)

1 பிரிவு வலிக்கும்நெஞ்சை இரண்டாய்ப் பிளக்கும். பிரிந்த மனதுள் துயரம் புகுத்தி உயிரோடு எரிக்கும். உடல் பொருள் ஆவி அத்தனையையும் அறிந்தே வெறுக்கவைக்கும். கல்நெஞ்சைக் கூட கண்ணீரால் உடைக்கும். கால இடைவெளிக்குள் புகுந்து அன்பைப் பெருக்கவும், அத்தனை துரோகத்தையும் மறக்கச்செய்யவும், மனிதரை ஒழிக்கச் செய்யவும், மனிதரின் முகத்தை மனிதர்க்கு மனிதராகவே காட்டவும்கூடச் செய்யும். ஏன், நம் … Continue reading →

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எல்லோரும் தற்கொலை செய்துகொள்ளுங்கள்..

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்) ————————————————————————————— (1) தற்கொலை செய்துகொள்ளுங்கள். கொலை என்பது கொல்வது எனில், சாக நினைக்கும் அத்தனைப் பேரும் முதலில் தன்னைத் தானே கொன்றுகொள்ளுங்கள். தானெனும் செருக்கு, தனது எனும் ஆசை, தன்னாலெனும் வருத்தம், தனக்கென்னும் சுயநலம், தனக்கான ஏக்கம் தனக்கான வலி, தன்னாலான தோல்வியெ என்று நினைப்பதன் பாரம் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இரத்தச் சுவடுகள்..

தலையில் அச்சு பதிய புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில் புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு; கிழிந்து கிழிந்துப் போன புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே மனதிற்குள் கிழியும் உணர்வுகளின் அடுக்குகளோடு நடக்கிறேன்; காயமுறுகிறேன்; ஆங்காங்கே – எதை எதையோ நினைத்து வலிக்கிறது மனசு.. உள்ளே வேகமாய் புகுந்தோடி வகுப்பில் அமர்ந்த அதே பதட்டம், பயந்து … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

60, ஒரு சொல் போகும் நேரம்..

எனக்கென்று பிறந்த ஒன்று இன்று எனைவிட்டுப் போகப்போகிறது; நான் சிரிக்கையில் சிரித்து அழுகையில் அழுத ஒன்று போகப்போகிறது; நடக்கையில் நடக்கவும் உறங்கையில் உறங்கவும் சுடுவதைக் கூட சகிக்கவும் முடிந்த ஒன்று போகப்போகிறது வளரும்போதே உடன் வளர்ந்து எனை வளர்த்த தாயைப் போன்றது’ இன்றுப் போகப்போகிறது அசிங்கம் பேசினாலும் சரி அவதூறு பேசினாலும் சரி செய்வது எதுவாயினும் … Continue reading →

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்