Tag Archives: மனைவி

80) அவள் கொடுத்த தேநீரில்; முத்தமும்! முத்தமும்!!

1 நீ கொடுக்கும் தேநீரில் எனக்காக சர்க்கரை சேர்ப்பியா அல்லது இரண்டு முத்தத்தை இடுவாயா? சர்க்கரை கடந்த ஒரு இனிப்பு தேனிரிலும் – எனக்குள்ளும்!! ————————————————————————— 2 வாழ்வின் நகர்வுகளை எனக்காக சுமப்பவள் நீ என்று புரிகையில் – உன் மீதான அன்பே வாழ்வின் அற்புதம் என்றெண்ணினேன்!! ————————————————————————— 3 காலத்திற்குமான ஒரு சக்கரத்தில் – … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “மனைவி..”

கட்டிலுக்கும் – தொட்டிலுக்கும் பாடுபடுபவன் என்றும், சுமைகளை சுகமாக்கிக் கொள்ளும் வரம் கணவனென்றும்’ மிக சிறப்பாக கவிதை பாடிய ஐயா அவர்களுக்கு என் மிகையான பாராட்டினைத் தெருவிகிறேன். காரணம், ஒரு கணவனை பற்றி ஒரு மனைவி எனும் பெண் பாட இருந்தார் சூழ்நிலை காரணமாக அவர் வர இயலாமல் போனாலும் தானே ஏற்று சிறப்பாக இவ்விரண்டு … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

(83) பிரிவுக்குப் பின் – நிறைவுறுகிறது!

உடம்பெல்லாம் நரைத்து சிரித்த ரோமங்களுக்கிடையே – வலித்துக் கொண்டன – உன்னோடில்லாத அந்த தனித்த நாட்களெல்லாம்; ஊரெல்லாம் சிரிக்கும் சப்தங்களை தாண்டித் தானடி கேட்டுக் கொண்டிருக்கின்றன – நாம் பிரிந்து தவித்த அந்த விசும்பலின் சப்தங்களெல்லாம்; நெருப்பில் சிவந்து தகித்த அனலாய் எரியுதடி – உன்னோடில்லாத நாட்களின் இரவில் கரைகளாய் படிந்து கரைந்தோடிய நம் இளமையும் … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 82

இன்று எனக்குப் பிறந்தநாள், புது துணியுடுத்தி எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து தொலைபேசியில் எல்லோரிடமும் வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து கண்ணாடி பார்கையில் கண்களின் ஓரம் – ஒரு சொட்டுக் கண்ணீர் சுட்டது; தூக்கம் கலைவதற்குள் நீ வந்து என் காதுகளில் கிசுகிசுக்காத பிறந்த நாள் ஒரு பிறந்த நாளா!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 81

தொலைபேசியில் பேசும்போது – ஏதோ நீ பேச வந்ததை பாதியில் நிறுத்தினாய்; நாம் கடந்த இரவுகளின் மிச்ச ஆசைகள் என்று நினைக்கிறேன்; தயவுசெய்து – கடிதத்தில் கூட அவைகளை எழுதிவிடாதே, இன்னும் – ஒன்றரை வருடத்திற்கு மேல் சுமக்க எனக்கு பலமில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக