Tag Archives: முள்ளிவாய்க்கால்

2 கல்லறைகளின் மீதாவது உறங்கி; உயிர்திருப்போம்!

எம் சுவாச மூச்செலாம் வெடிகுண்டு நெடியில் விசமேறிப் போயிருந்தும் – விடுதலைக்கென்றே உயிர்சுமந்துத் திரிகிறோம்: தெருக்கள் நெடுகிலும் உலாவந்த எம் சின்னஞ்சிறு குழந்தைகளெல்லாம் வீழ்ந்த குண்டுகளில் சிதைந்துப் போனாலும் தெருவின் கடைகோடி வீட்டின் – ஒற்றை உயிருக்காய் விடுதலை கோரி நிற்கிறோம்; பசுமை குன்றியிரா எம் தேச நிலங்களிலெல்லாம் – கன்னி வெடிகளே புதைந்திருந்தாலும் எடுத்து … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

46 எம் வீர காவியம் நின்னு கேளுடா; ஈழம்!

எம் வீர காவியம் நின்னு கேளுடா ஈழமுன்னா வெறும் மண்ணு இல்லைடா.. புலி கொடி பறந்து ஆண்ட தேசம்டா உலகை; இன்றும் தாங்கும் ஒற்றை இனமடா! பெண்ணைத் தாயென பார்த்த பூமிடா வந்தவரெல்லாம் வாழ்ந்த மண்ணுடா; பொண்ணும் பொருளும் நிறைந்த சொர்க்கம்டா போட்டதை எல்லாம் விளைத்த வர்கம்டா..! காலம் ஏனோ மாறி போச்சிடா கயவர்களாலே ஆடி … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

45 முடிவல்ல – ஈழம்!

முள்ளிவாய்க்காலில் முடிந்து போகும் முடிவல்ல – ஈழம்! காற்றின் அசைவுகளில் ஏக்கமாகப் படிந்த கறையது ஈழ விடுதலை; ஈழவரலாற்றில் ரத்தத்தால் தொய்ந்த பகுதி முள்ளிவாய்க்கால்! அழகிய ஆனந்தபுரத்தை சுடுகாடாக்கி – சமாதியின்றி பல போராளிகளை செய்திக்கு – மரணப் படையலிட்ட பெருந் துயரம் முள்ளிவாய்க்கால்! சதைகிழிந்து உறுப்புகள் சிதறி உடல் துண்டிக்கப் பட்டு அரை உயிரில் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

44 துர்க்கா என்றொரு தாயுமானவள்!

உறவோடு உயிர்வளர்க்கும் பெண்மையை உதறிவிட்டு – எம் உறவிற்காய் உயிர்தந்த தாயுமானவளே, அடுப்பெரிக்கும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என்றோருக்கு முன் – அடித்து போர் புரிந்து ஈழ விடுதலை நெருப்பிற்கு தன்னையே தரித்தவளே; பெண்படைக்கு ஆண்படை அஞ்சுமளவு எம்படை – எவரையும் வெல்ல ஒரு தனிப்படையையே தேற்றியவளே; காலம் காலமாய் யாரேனும் வந்து எமக்கென்று ஒரு தேசம் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

(43) மனிதத்தை மண் தின்ற நாள்; மே-18

வாருங்கள் தோழர்களே.. உறவுகளின் உயிர்மூட்டை சுமந்து முல்லிவைக்காலில் உயிர் நடவு செய்வோம்; பச்சிளம் குழந்தைகள் துடித்த நினைவெடுத்து – சிங்களனுக்கு ‘வெண்மனப் பட்டம் தருவோம்; நான்கு புறம் பரிதவித்த – என் மக்களின் கதறல்களையெல்லாம் சேகரித்து உலக மனிதர்களின் காதுகளில் ஓதுவோம்; பால்குடி மறக்காத பச்சிளம் குழந்தைகளையும் அப்பாவி மக்களையும் – அநீதியில் கொன்ற கோழைகளுக்கு … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்