Tag Archives: வித்யாசாகர்

31 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

உன் பள்ளிக் கூடத்து வாசலில் வீழ்கிறது என் பார்வை. நீ வெளிவரும் நேரமோ என்று வாசல் நோக்கி நின்று விட்டேன். வெள்ளை சட்டை நீள பாவாடை. தேவதைகளை தோற்கடித்துவிட்டு நீ நடந்து வருகிறாய். வயது தாண்டி கற்பனை செய்ய துணியவில்லை என் மனசு, காதலிக்க மட்டும் செய்தது! ——————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

30 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

ஓடி வந்து மூச்சிரைக்க உன்னருகில் வந்து நின்றேன் என்ன என்றாய் இதோ இது ஒரு புது நாவல் சாண்டில்யன் எழுதியது படி என்றென்.. “ஹே…. கள்ளா.. பொய் தானே சொல்ற – உள்ளே என்ன காதல் கடிதமா…??!!!” என்றாய்… எழுதி வைக்காமல் போனேனே என மனசு அப்படி துடித்தது! —————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

29 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

எங்கேனும் ஒரு பக்கத்தில் புரட்டிப் பார் உன்னிடம் சொல்லவேண்டிய ஒன்றை எழுதியிருக்கிறேன் என்றென் புத்தகம் முழுதும் புரட்டிவிட்டு ஏமாற்றத்துடன் இல்லையே’ என்றாய். உனக்குள் ஏதோ இருப்பது எனக்கு இந்த கணத்தில் உறுதியானது! ——————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு படைப்பாளியின் வெற்றிக் களிப்பு – ஓவியர் கொண்டல்ராஜ்!!

அன்புடையீர் வணக்கம்.., வெற்றியின் ஏக்கம் உடைத்தெறியும் தருணம் ஒவ்வொரு படைப்பாளிகளின் வியர்வைக்கும் பதில் சொல்லவே செய்கிறது. என்றோ குவைத்தில் நடந்த ஒரு கண்காட்சிக்கு சென்று அன்பு தெரிவித்ததை மனதில் கொண்டு, சென்னையில் இருந்து குவைத்திற்கு தொலைபேசியில் அழைத்து அன்பொழுக நன்றி பாராட்டி இங்ஙனமெல்லாம் ‘உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் நடந்ததென்று சொல்லிமகிழ்ந்த ஓவியர் திரு.கொண்டல் ராஜின் நன்றியுணர்வு … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

27 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

நம்மூர் கோவிலில் நீயும் நானும் ஒன்றாக சாமி சுத்தி வந்த நாட்களில்; நான் பார்க்காத நேரத்தில் நீயும் – நீ பார்க்காத நேரத்தில் நானும் பார்த்துக்கொண்டது சாமிக்கு மட்டுமே தெரியும்!! ————————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்