ஒற்றுமையில்லாமையின் குற்ற சாட்சி; செங்கொடி!

1
து
ண்டு துண்டாய்
கசிந்து
எரிந்து
வெடித்த ஒற்றுமை நெருப்பு
உன் உடல் தீயில் வெந்து
ஒரு இன வரலாற்றை
திருப்பி வாசிக்கிறது!
—————————————————————-

2
ற்கொலை
கொலை
விபத்து
எதுவாயினும்’
போன உயிர் வாராதென்பதை
உரக்கச் சொல்லவும்
உன் உயிர் எரியும் தீக்கொழுந்து
மறைமுகமாகவேனும் ஒரு இனத்தின்
தேவையானது!
—————————————————————-

3
கா
ற்று
வானம்
மனற்பரப்பின் மீதெல்லாம்
உன் கரிய நாற்றத்திலும்
மணக்கிறது – உன்
மூன்று உயிர்களுக்கான
உயிர் தியாகம்!
—————————————————————-

4
தை
ரியம்
வீரம்
பலம்
பணம்
படை
ஒன்றும் செய்யாததை
அன்று அவன் செய்தான்;
அண்ணன் முத்துக் குமரன்.

இன்று நீ செய்தாய்.
தங்கை செங்கொடி.

ஆக,
எங்களுக்கு விடுதலையின்
முழுக்கண் திறக்க
இரண்டு உயிரின் எரிவெளிச்சம்
ஒற்றுமையில்லாமையின்
குற்ற சாட்சியே!
—————————————————————-

5
தெ
ருவெல்லாம் நீ
கனவு சுமப்பவள்
விடுதலை உணர்வை சுமந்தாய்,
போராட்ட நெருப்பை
மிதித்து வளர்ந்தாய்;

நாங்கள் கனவை கூட
கடன்கேட்டு
உணர்வை
உறக்கத்தில் தேடிக் கொண்டிருந்தவர்கள் – உன்
சவம் தூக்கி அலைகிறோம்;

நீ கல்நெஞ்சைச் சுடும்
நெருப்பாகியும்,
நாங்கள் அதன்
வெளிச்சத்தை ஏந்திக் கொண்ட
இருட்டாகவே இருந்தோம்’

இதோ,
நீ கரிந்துப் புரண்ட இடம்
எங்களையும் வெகுவாய்
புரட்டிப் போட்டுள்ளது,

நீ சாகுவரை
சொன்ன வார்த்தை
எங்களின் வாழும் வரைக்கான
கனவானது,

நீ செய்யாது செய்யத் துணிந்த
செயல் எம் ஒவ்வொரு தமிழனின்
ரத்தத்திலும்
தீப் பெருக்கென மூண்டது,

அணு அணுவாய் நீ துடித்த
துடிப்பு இனி
ஒரு உயிரையும் இழக்கா வேகத்தின்
முதற்புள்ளியானது,

விடுதலைக்கு வித்து
கொலையல்ல,
தற்கொலையுமல்லவென்று
சிந்திக்கச் சொல்லிச்
செவிட்டில் அறைந்தது,

இதோ,
புறப்பட்டுவிட்டோம்,
எதற்குமே தயங்கவில்லை – ஒன்றுக் கூடி
போராடத் துணிந்துவிட்டோம்,
நீ மறைந்த இடத்திலெல்லாம்
இனி யாம் பதித்துவைக்கும் – இன விடுதலையின்
ஓர் பெருத்த உணர்வை’
உயிர்வரை சுமந்து நடப்போம்,

நடந்து நடந்து உன் சுவாசத்தின்
மிச்சக் காற்றுத்
தீர்ந்துப் போகும் முன்னந்த
அண்டவெளியில்
உன் உயிர் வெளிச்சத்தில்
வென்றெடுப்போம் இருட்டில் பெற்ற
நமது பழைய சுதந்தரத்தை!
—————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to ஒற்றுமையில்லாமையின் குற்ற சாட்சி; செங்கொடி!

  1. வித்யாசாகர் சொல்கிறார்:

    தன் உயிரை கொடுத்தேனும் எம் மூன்றுயிரை தற்காலிகமாக காத்த அன்புத் தங்கை செங்கொடிக்கு காலம் போற்றும் நன்றியும், வீரவணக்கமும்!!

    Like

  2. Umah thevi சொல்கிறார்:

    //உன் உடல் தீயில் வெந்து
    ஒரு இன வரலாற்றை
    திருப்பி வாசிக்கிறது!//

    செங்கொடிக்கு வீரவணக்கம்!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி உமா. போற்றப் படவேண்டியவள் தங்கை செங்கொடியாள். ஆனால், அவளை தொடர்ந்து இது இனி நடக்கலாகாது. போராட்டத்தால் வெல்லாவிட்டாலும், மரணத்தால் தோற்காமல் இருப்பது மேல்!!

      Like

  3. suganthiny சொல்கிறார்:

    ஆயிரம் மலர்கள் பூத்தாலும் ஒரு மலரை தான் சூட முடியும் ஏனெனில் அது அழகானது என்பார்களே’ அதே போல் உலகில் எத்தனை மனிதர்கள் வாழ்ந்தாலும் செங்கொடி போன்றவர்களால் தான் உலகம் இன்னும் இருக்கிறது.

    அவர்களை போன்றவர்கள் மத்தியில் என் போன்றவர்கள் இருப்பது
    ஒரு வெட்கக்கேடான விடயம் தான். ஆனால் ஒன்று மட்டும் நான் தெளிவாக
    சொல்வேன். என்ன தான் நாம முட்டி மோதினாலும் இந்த கண்கெட்ட உலகில்
    அநீதி தான் வாழும் என்பதை நன்றாக உணர்கிறேன்.

    அதே போல் உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் இதை புசிக்க செய்யாவிட்டால் அவள் போன்ற பல
    உத்தமர்கள் வாழ்ந்தாலும் செத்தவர்களே. அதனால் என் சகோதரனுக்கும்
    கோடி கோடி நன்றிகள் பல..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      உரிமைக்கு போராடும் அத்தனைப் பெரும் போராளிகள் தானே சகோதரி. ஒவ்வொருவரும் அவரவருக்கு இயன்றதை செய்தால் முடிவில் வெற்றி ஒரு இனத்திற்கானதாக இருக்குமென்று நம்புகிறேன். நம்பிக்கையோடிருப்போம்!!

      Like

  4. munu.sivasankaran சொல்கிறார்:

    //தெருவெல்லாம் நீ
    கனவு சுமப்பவள்
    விடுதலை உணர்வை சுமந்தாய்,
    போராட்ட நெருப்பை
    மிதித்து வளர்ந்தாய்;

    நாங்கள் கனவை கூட
    கடன்கேட்டு
    உணர்வை
    உறக்கத்தில் தேடிக் கொண்டிருந்தவர்கள் – உன்
    சவம் தூக்கி அலைகிறோம்;

    நீ கல்நெஞ்சைச் சுடும்
    நெருப்பாகியும்,
    நாங்கள் அதன்
    வெளிச்சத்தை ஏந்திக் கொண்ட
    இருட்டாகவே இருந்தோம்’

    இதோ,
    நீ கரிந்துப் புரண்ட இடம்
    எங்களையும் வெகுவாய்
    புரட்டிப் போட்டுள்ளது,

    நீ சாகுவரை
    சொன்ன வார்த்தை
    எங்களின் வாழும் வரைக்கான
    கனவானது//

    இனி அவள்தான் தமிழர்களின்’ உறக்கத்தை உசுப்புகின்ற உதய சூரியன்!!

    Like

பின்னூட்டமொன்றை இடுக