31, இது நம் ஒற்றுமையின் இரண்டாம் பாடல், இசை ஆதி!

உறவுகளுக்கு வணக்கம்,

விரல்பிடித்து அழைத்துவந்த உங்களின் பின்னால் வந்த என் எழுத்தினை  இசையாக்கி அதைப் பாட்டாகவும் அமைத்துள்ளோம் முகில் படைப்பகம் மூலம்.

ஒற்றுமை நம் வலிமையான ஆயுதம்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் எண்ணமாக இப்பாடல் பதியப் பட்டுள்ளது. எங்கோர் தமிழன் ஒடுக்கப்பட்டாலும் எங்கிருக்கும் தமிழனுக்கும் சுள்ளென உரைக்கவேண்டும், அங்ஙனம் உரைக்கையில் அது வலித்து துடித்து எழுச்சிகொண்டெழும் ஒரு உணர்வில் நம் ஒற்றுமையின் வெளிப்பாடு மேலோங்கும். நமைப் பின்னடைவு செய்ய முனைவோரை எச்சரிக்கும் மீப்பேறு பலமாக அது மாறும். அங்ஙனம் மாறுகையில் நம் மேல் ஆங்காங்கே திணிக்கப்படும் அடிமைத் தனத்தின் ஆளுமைகள் அவசியமற்றுப் போகும். நமை அடிமைப்படுத்த தொடுத்த ஆயுதங்கள் சுக்குநூறாக்கப்படும். நதியை தடுப்பவனிலிருந்து’ ஆயுதம் கொடுத்து நம் இன மக்களை ஒழிக்க நினைப்பவன் வரை மறைமுகமாய் எச்சரிக்கப்படுவான்.

பின்னாளில், துணிந்து நிமிர்ந்து முழுமையாய் எல்லோரும் எழுந்து நிற்கும் நம் தமிழரின வாழ்வின் பொதுநலக் கருத்துக்கள் மெல்ல மெல்ல உலக வீதிதோறும் பரவும். ஆழமாகப் பரவுமந்த நம் வாழ்வியலில் உலகத்திற்கான பண்புகளும் நிறைந்துள்ளதை உலகமக்கள் ஒரு தினத்தில் புரிந்துக் கொள்ளக் கூடும்.

அத்தகைய ஒரு மாற்றத்தின் பாடுபொருள் ஒற்றுமையாய் நின்று நாங்கள் இத்தகையவர்கள்’ இங்ஙனம் உலகு பரந்து நிற்கிறோமென்பதை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலேனும் காட்டுவதில் மட்டுமே அடங்கியிருப்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

அடிமைத்தனத்தினால் வஞ்சிக்கப்படும் நம்மின மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக மட்டுமேனும் நமது ஒற்றுமை பலத்தை திரட்டி ஓர் தினம் உலகிற்குக் காட்டவேண்டும். எனவே ஒடுக்கப்படும் ஒழிக்கப்படும் நம்மின மக்களின் நலனுக்கென ஒன்றுகூடுங்கள். ஒற்றுமை உணர்வு பொங்கி, என்றைக்கும் நாங்கள் தயாரென ‘ஆளுக்கொரு கை தூக்கி நில்லுங்கள்; உலக உருண்டை அசாத்தியமாய் நம் விரல் நுனியில் ஒரு நாளில் வந்து நிற்கும்..

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to 31, இது நம் ஒற்றுமையின் இரண்டாம் பாடல், இசை ஆதி!

  1. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    Like

  2. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    மிக்க நன்றி ஐயா. உங்களுக்கும் அம்மா மற்றும் உறவுகளுக்கும் எங்களின் வணக்கத்தையும் வாழ்த்தினையும் சொல்லுங்கள்… நிறைய அன்பும் மகிழ்வும்!

    Like

  3. தமிழ்த்தோட்டம்'s avatar தமிழ்த்தோட்டம் சொல்கிறார்:

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    Like

  4. jayashree's avatar jayashree சொல்கிறார்:

    பாடல் அருமை..வாழ்த்துக்கள்…..வரிகள் ஒவ்வொன்றும் எழுச்சியைத்
    தருகிறது…நல்ல முன்னேற்ற முயற்சி…தங்களின் வலைபூ பார்த்து
    பிரம்மித்துப் போனேன்……நல்ல படைப்புகள்…கண்ணதாசன் மீண்டு
    வந்தது போல்…உங்கள் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    Like

பின்னூட்டமொன்றை இடுக