Monthly Archives: பிப்ரவரி 2012

43, விளக்குகளை அணை; வெளிச்சம் வரும்!

வீட்டுச் சுவரை இடித்துவிட்டு கதவுகளை மூடிக் கொள்பவர்கள், தெருவில் விளக்கிட்டுவிட்டு வீட்டிற்குள் வெளிச்சம் தேடி யலைகின்றோம்; வாசலில் கோலம்போட்டு உள்ளே கோழி வெட்டும் வீரர்கள், பேங்க் லாக்கரில் பணமும் நகையும் சேர்த்துவிட்டு தெருப்பாடகனுக்கு வெறுங் கையசைக்கும் வள்ளல்களாகின்றோம்; பட்டுப் புடவைக் கட்டி அசைவ பாவம்பற்றி பேசுபவர்கள், பட்டுப்பூச்சி வாழ்க்கையதை விதியின் வாளால் கொல்லவே விரும்புகின்றோம்; நெற்றிப்பொட்டில் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

50, அகதிகளாய் இருக்கும் வரை; அனாதைகள் நாங்கள்

உங்களுக்கொன்று தெரியுமா நாங்களெல்லாம் அனாதைகள்; அம்மா இருந்தும் அப்பா இருந்தும் மண்ணிழந்த அனாதைகள்.. மண்ணெண்றால் உயிரென்று புரிய ஊர்விட்ட அனாதைகள்; ஆடிப்பாடி ஓடி விளையாண்ட இடம் காடாய் கனக்க விட்டுவந்த அனாதைகள்; தவறிழைத்தோம். அங்கேயே படுத்து அங்கு வெடித்த குண்டுகளோடு வெடித்து சிதறியிருக்கலாம்; வெடிகளைதாண்டி உடையும் வலி தீரா அனாதைகள் நாங்கள்; எங்கள் மண்; எங்கள் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

42, அடிமைத்தனத்திற்கு அவள் முதலெதிரி; அதனால் நானும்!!

மிருகங்கள் மிருகங்களாக வாழும் ஊரது மனிதர்கள் மிருகங்களாகவும் மாறிய நாடது மிருகங்கள் மனிதர்களோடு பழகப்பட மனிதருக்கும் மிருகத்திற்கும் நடுவே சில மனிதர்களும் மிருகங்களுமாய் – நானும்; அவளும்; நவீன ஆடைகொண்டு மறைத்தும் மறைக்காமல் அவளும் உடம்பு மூடியதை கிழிக்கும் பார்வையுடுத்தி நானும் சிரிப்பை அணிந்த உடம்பாய் அவளும் காதலின் இலக்கணத்திற்கு எதிரே நடக்கிறோம்; அவளுக்கு நான் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

41, மரணத்தின் மாறாத வாசனை – வித்யாசாகர்!

அது ஒரு கொடிய நாள் அன்று தான் முதன் முதலில் ஒருவரின் மரணம் பற்றி கேள்வியுற்றேன் அவர் இறந்துவிட்டார் என்றார்கள் இறப்பதென்றால் என்ன என்றேன் இறப்பதெனில் – இல்லாதுபோவதென்றார்கள் இல்லாதுயெனில் இங்கிருந்து இல்லாமல் போவதா அல்லது எங்குமே இல்லாதுப் போதலா? என்றேன் அறிவிருக்கா உனக்கு? தத்துவம் பேசுமிடமா-யிது? அவர் என்னை கடிந்துப் பேசி பின் முறைக்கவும் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

40, இன்றைய சுடுகாடொன்றில் பிறக்கட்டும் நாளைய மனிதம்!

மண்ணிற்கு சண்டையிட்ட வாள்களின் ரத்தம் இன்னும்  காய்ந்திடாத மனத்திரையில் விரிகிற காட்சிகளில் மரணமின்னும் நிகழ்கிறது மரணத்தின் பெயர்தான் கொலையில்லை; சொற்களின் வசியத்தில் அசைகின்ற தலைகளில் சரிதவறு சிந்திக்கப்படாத அங்கீகரிப்பில் நடக்கின்றன கொலைகள் – உயிர்போதலுக்குப் பெயர் மரணம் மட்டுமே; மண்ணுக்கும் பெண்ணுக்கும் வீங்கிய இதயம் தனக்கென்று துடித்து துடித்தே சுடுகாடுமுட்டும் அழுது புலம்புதலில் அடுத்தவன் ரத்தமோ … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக