நீயந்த நிலவிற்கும் மேல்..

 

 

 

 

 

 

1
னக்கென்ன
வனம் கேள் வானம் கேள்
கடல் கேள் காதல் கேள்
மண் கேள்
மலையும் ஒரு காட்டையும் கூட கேளேன்..

எதுவாயினும் உனக்காகக்
கொண்டுவருவேன்;
நீ உனது சின்ன சிரிப்பை தா போதும்!!
—————————————————–

2
தென்ன மல்லிகை முற்றமும்
அதன் அருகே நிலாவும்
கூட நீயும்.. ?

எனக்கு நீ
உனதருகில் மல்லிகை முற்றம்
நம்மோடு நிலா

ஏன்னா
மீதி எல்லாம் வரும் போகும்
போகும் வரும்,

நீ வருவாய்
வருவாய்
போகமாட்டாய்..
—————————————————–

3
னக்குதான்
பேச்சிலென்ன தேன் குழைந்திருக்கோ ?

உனக்கு தான்
காற்றில் சிறகுகள் வீசி பறக்கத்
தெரிகிறதோ?

உனக்கு தான்
தேவதையின் சிரிப்பழகும்
மலர்களின் மெல்லழகும்
கூடுதலோ..

காணுமிடமெலாம்
என் கண்களுக்கு நீயே தெரியுமந்த
வித்தை கூட
உனக்கே தெரிந்திருக்கிறது..

உண்மைதானே
இப்போதெல்லாம் எனக்கு சிரிப்பும்
அழையும் கூட ஒன்றாகவே தெரிகிறது
இரண்டிலும் நீயே இருப்பதால்..
—————————————————–

4
ள்ளிக்கூடம்
போகையிலும் சரி

கல்லூரி காலமும் சரி

அலுவல் சென்றாலும் சரி

எங்கே எதன் பொருட்டு நான்
உயிர்த்திருந்தாலும் சரி

உனை நினைத்திருக்கிறேன்
என்பதே உண்மை..
—————————————————–

5
து உனக்கு பிடிக்குமோ
அதை உனக்கு தர விரும்புகிறேன்,

எதில் நீ
நிறைவாயோ
அதையே தர விரும்புகிறேன்,

எதில் உனக்கு மகிழ்வோ
அதையே தரத் தான்
தவிக்கிறேன்

அது பிரிவாயினும் சரி
அது உயிராயினும் சரி
உனை மறப்பதாயினும் கூட..
—————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to நீயந்த நிலவிற்கும் மேல்..

  1. பிங்குபாக்: நீயந்த நிலவிற்கும் மேல்.. – TamilBlogs

பின்னூட்டமொன்றை இடுக