30, பெரும்பேர் கொண்டயென் நாடு..

 

 

 

 

 

 

பச்சை பச்சை காடெங்கும்
இச்சை இச்சை ஆண்டைகளே,
பழுத்தமரம் ஊரெங்கும்
உடம்புண்ணும் பாவிகளே;

மெத்து மெத்தாய் பொய்கள்கூறி
ஆதி குடியை யழிக்கிறதே,
பட்டுகெட்டும் திருந்தாது
பண்டை வளம் ஒழிக்கிறதே..

கொத்தக் கொத்தாய் கொன்றதையும்
முத் தமிழால் திட்டிவைத்தோம்,
எள்ளளவும் பகையில்லை
மௌனம் கொண்டே கொள்ளியிட்டோம்..

சட்டம் செய்த மேதைகளின்
அறிவினிலே தீ யிட்டு
சட்டம்பேணும் அரசியலில்
வானளவு கிழிசல் ஆச்சே..

நெஞ்சளவு நீரடங்கி காவிரியில்
கோடிழுத்தோம்,
வஞ்சப்பட்டு வஞ்சம் செய்து
வரண்டநில வெடிப்பில் மாண்டோம்

பிறந்து மண்ணில் விழுந்தபோது
இரத்தம் ஒன்றே இரத்தம் ஒன்றே.,
கையெடுத்து வணங்கும்போதும்
புத்தம் ஒன்றே புத்தம் ஒன்றே

பின் –

பெற்றத்தாய் வயிறெங்கும்
வெடிவெடிப்பாய் கோடுகளேன் ???
ஒற்றுமையின் கரங் கோர்த்து
எம் வளத்திற்காய் பாடுபடேன்..
————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to 30, பெரும்பேர் கொண்டயென் நாடு..

  1. பிங்குபாக்: 30, பெரும்பேர் கொண்டயென் நாடு.. – TamilBlogs

பின்னூட்டமொன்றை இடுக