இங்கிலாந்து நாட்டின் “ஐந்தாவது உலக பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழ் சாதனையாளர்கள் விருது விழா – 2019” கடந்த திங்கட் கிழமை நாள் 09.09.2019 அன்று இலண்டன் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. பல நாட்டு தொழிலதிபர்களின் முன்னிலையிலும், இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்குள்ள பிற தமிழ் அமைப்பினர்களின் போற்றுதலோடும் இவ்விருது விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
உலகத் தமிழர் அமைப்பு (WTO ) மற்றும் கூட்டமைப்பின் தலைவர் திரு. ஜேகப் ரவிபாலன் இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்த, நடன ஆசிரியர் மற்றும் சன் தொலைக்காட்சி புகழ்மங்கை திருமதி.திவ்யா அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில், உயர்த்திரு. நியா கிரிஃபித், மார்ட்டின் வொய்ட்பீல்டு, வீரேந்திர சர்மா போன்ற இலண்டன் (MP) பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜெனிவா நாட்டின் (MP) பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. சசீந்திரன் முத்துவேல், டாடா (TATA ) நிறுவனத்தின் இங்கிலாந்து பிரிவுத் தலைவர் திரு. டிம் எல் ஜோன்ஸ், மற்றும் தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், குவைத், ஜெர்மன், துபாய், இந்தியா, கொரியா போன்ற நாடுகளிலிருந்து பல சாதனையாளர்களும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மதிப்புமிகு மூத்த தொழிலதிபர் உயர்திரு. விஜிபி சந்தோசம், தென்னாப்பிரிக்கா தொழிலதிபர் திரு. கார்த்திகேசன் மூத்சாமி, குவைத் தொழிலதிபர் திரு. ஐதர் அலி போன்றோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், நம் சல்லிக்கட்டு நாயகன் திரு. கார்த்திகேய சேனாபதி, குவைத் கவிஞர் திரு. வித்யாசாகர், லண்டன் தொழிலதிபர் திரு. ஜாஹிர் உசேன்,நம் சல்லிக்கட்டு நாயகன் திரு. கார்த்திகேய சேனாபதி, பிரான்சிலிருந்து வந்திருந்த திருமதி. ரேஷ்மி ஜவகர் கணேஷ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் திரு. குமரன் கவுண்டர், இளம் தொழில் வல்லுநர்கள் திரு. சுகேந்திரன் மூலே மற்றும் திரு. அகமத் வதூத் போன்றோருக்கு சாதனையாளர் விருதும் வழங்கி இம்மாமன்றம் பல நாட்டு திறமையாளர்களை கௌரவித்தது.
இவ்விழாவில் கவிஞர் திரு. வித்யாசாகர் அவர்களுக்கு அவரது தமிழ் ஆளுமை, படைப்பு நேர்த்தி, மற்றும் பல தமிழ்ப் பணித் திறன்களைப் பாராட்டி “இலக்கியச் சிகரம்” என்ற பட்டமும் தந்து (WTO ) உலக தமிழர் அமைப்பு பெருமைச் சேர்த்தது.
தொழில் முன்னேற்றம் மற்றும் பல நாடுகளில் உள்ள தொழில்வளம் பற்றியெல்லாம் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் கருத்து பரிமாறிக்கொண்டனர். அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் விருது பெற்ற அனைத்து திறனாளர்களுக்கும் வாழ்த்தினை தெரிவிக்க, வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் அமைப்பின் தலைவர் உயர்திரு. ஜேகப் ரவிபாலன் அவர்கள் நன்றி பாராட்டி விழாவை நிறைவு செய்தார்
வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 901,629
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

மார்ச் 2020 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.


























