Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

14 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

உன் வாசத்தில் ஒரு சொட்டு உன் தாவணிப் பூவிலிருந்து விழுகிறது – அள்ளிப் பருகும் காற்றிடம் கோபம் கொண்டு – உன் தாவணியை பிடித்தேன் நான் எனை முறைக்க வில்லை நீ சிரிக்கவில்லை பார்க்கிறாய் பார்க்கிறாய் அப்படி பார்க்கிறாய் உன் தாவணி எடுத்து இரு கை நிறைத்து உயிர்வரை நுகர்கிறேன் நான் உன் வாசம் என்னுள்ளே … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

13 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

உன் கைகடிகாரப் பட்டையின் உள்ளே சொருகி வைத்திருந்த புகைவண்டியின் அனுமதி சீட்டு கீழே விழுந்து விடுகிறது. நீ எடுக்காமலே புகைவண்டியிலிருந்து இறங்கிப் போகிறாய். நான் தவற விட்டு விட்டாயோ எப்படியேனும் – எடுத்துக் கொடுப்பது போல் உன்னை அருகில் வந்து பார்த்து விடலாமென எடுத்துக் கொண்டு ஓடி வருகிறேன். நான் அருகில் வந்ததும் நீ சிரித்துவிட்டு … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

11 உடைந்த கடவுள்..

உலகம் சுற்றி நடக்கும் கொடுமைகளால் ஒன்றிரண்டாய் தென்படுகிறது மனிதத்தின் தலை தென்படாத மனிதத்திற்கிடையே உடைகிறது கடவுள்! இருநூறு ஆண்டுகளுக்கு மேல் அடிமை பட்டு கிடந்த மண்ணில் புதைந்த உயிர்களின் மறந்த வலியால் – ஈழத்தில் நடந்த கொலைகளில் – உடைந்தது கடவுள்! தெருவெல்லாம் பிச்சையெடுத்து வழி நெடுகும் இரைந்த வறுமைக்கு வழி தேடாத அரசின் மெத்தனத்தில் … Continue reading

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 13

ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி; எல்லாமே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த ஆடைகள்; இரண்டு வாங்கினால் ஒன்று இனாமாக தரப் படும்; வேறெங்குமே கிடைத்திடாத தரம்; இப்படியெல்லாம் ஏமாற்றித் தான் விலைபோகிறது – ஏழைகளின் வியர்வையும் ரத்தமும்!! ————————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

10 உடைந்த கடவுள்!!

சந்து பொந்துகளிலெல்லாம் வீழ்கிறது மனிதம்; எந்த புள்ளியில் பிறர் மன்னிக்கப் படுகின்றனரோ அந்த புள்ளியிலிருந்தே மனிதம் வீழாதிருக்கலாம்; வீழ்ந்தும் போகலாம்! ————————————–

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக