Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

9 உடைந்த கடவுள்!!

வட்டிக்கு பணம் வாங்கி வட்டிக்கு பணம் வாங்கி உடைகிறது சேமிக்கும் மனப்பான்மை; இல்லாமலே போகிறது மனசாட்சி!! ——————————

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

8 உடைந்த கடவுள்!!

எங்கெங்கோ யார் யாரோ பேசிக் கொள்கிறார்கள் – அவன் சரியில்லை அது செய்தது உலகமே அப்படித் தான் என்றெல்லாம்; நான் இப்படித்தானென்று ஒத்துக் கொள்ள – யாருக்குமே துணிவில்லை!! ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

7 உடைந்த கடவுள்!!

சுட்டெரிக்கும் சமுகத்தில் சுயமாக – எல்லோரும் சிந்திக்காதலில் ஒவ்வொன்றாய் நிகழ்கிறது கொலைகள்; மதமென்றும் ஜாதியென்றும்.. இனமென்றும் பணமென்றும்.. உறவேண்டும் காதலென்றும்.. கடவுளென்றும் கூட!!! —————————————–

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

6 உடைந்த கடவுள்!!

மனிதன் செய்யும் தவறுகளில் – கடவுள் உதவிக்கழைக்கப் பட்டு கடவுள் தோற்கடிக்கப் பட்டு கடவுள் குறை சொல்லப் பட்டு கடவுள் குற்றம் சாட்டப் பட்டு கடவுள் மறுக்கப் பட்டு கடவுள் சபிக்கப் பட்டு கடவுள் உடைந்து தான் போனார். மனிதன் உடைக்கவில்லை என்கிறான்; கடவுள் மனிதனை ‘உடைத்ததாக சொல்வதேயில்லை. கடவுள் கடவுளாகவே இருக்கிறார்!! ——————————————

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எழுச்சிக் கவிதாயினி சரளாவின் கவிதைகள்..

என்னால் சந்தோசத்தை பகிரமுடிவதில்லை. முழுதாய் உணரவும் துய்க்கவும் முடிவதில்லை. கண் மூடினால் கற்பு களவாட படும் – கண் திறந்தால் கற்பு அழிக்கப்படும் என கங்கணம் கட்டிகொண்டிருக்கும் கள்வர்களுக்கு மத்தியில் – காற்றில் கரைந்து விட துடித்து கொண்டிருக்கும் என் சகோதரியின் அவலத்தை நினைக்கையில் – எப்படி என்னால் இன்பத்தை துய்க்க முடியும்??? துக்கத்தின் அடக்க … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged | 26 பின்னூட்டங்கள்