Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

என் ஜன்னலோரத்தில்.. ஈழம்!

என் ஜன்னலோரத்தில் நுழைந்த சப்தம் காதை எரிக்கையில் – ஜன்னல் திறந்து – சற்று வெளியே பார்க்கிறேன் அதோ – ஈழமொரு சொட்டு நம்பிக்கையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது, உலகம் எங்கோ தன் தலையை திருப்பி வலியவன் தோள் தேடி அலைகிறது, ஓடி – ஒரு வார்த்தை ஏனென்றுக் கேட்டிடவோ – என் உயிர் தந்து தேசம் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 51

நீ அழுகின்ற ஒருசொட்டுக் கண்ணீருக்கு என் உயிரு உருகுதடி; இப்படி இரவில் அழுது தீர்த்த வருடங்களெல்லாம் நமக்கு வாழக் கிடைக்காத வாழ்க்கையடி…! இரவு மூணு மணிக்கும் நாளு மணிக்கும் சூரியன் வரமாலேயே – பொழுது விடியுதடி; இரவு பத்தோ-பன்னிரண்டோ ஆனாக்கூட உன் நினைவில் உயிருருக – தூக்கமெல்லாம் எங்கோ மறைந்து தொலைக்குதடி! நீ பேசும் குரல் … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

அனைவருக்குமோர் நற்செய்தி!

இப்பிரிவுக்குப் பின் கவிதைகளனைத்தும் “பிரிவுக்குப் பின்” புத்தகத்திலிருந்தே பதியப் படுகின்றன. புத்தகம் வாங்க விரும்புவோர் குவைத்தில் (00965) 67077302 என்ற எண்ணிற்கும், சென்னையில் 25942837, 9786218777 என்ற எண்களுக்கும் தொடர்பு கொண்டு புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். புத்தக விலை, ரூ. 70 இப்புத்தகங்களின் மூலம் வரும் வருமானங்களை உதவியின்றி தவிப்போருக்கு உதவவே பயன் படுத்துகிறோமென்பதையும் மகிழ்வுடன் … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 10 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 50

மழை பெய்த ஈரத்துணி வாசத்தில் மணக்கிறது – நீ என் தலை துவட்டிய உன் – ஈரப் புடவையின் வாசம்!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 49

உன் அலமாரியில் அடுக்கி வைத்திருந்த உன் – விட்டு சென்ற சுடிதார்களை பார்க்கையில் தெரிந்தது; உன்னை விட்டிருப்பது எத்தனை கடினமென்று!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்