Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

பிரிவுக்குப் பின் – 48

இருந்துமாய் இல்லாததுமாய் தான் நகர்கிறது – நம் வாழ்க்கை; குவைத்திற்கும்.. சென்னைக்கும்.. நடுவே!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 47

நீயும் நானும் பிரிந்த சந்தோசத்தில் இந்த – வெள்ளைத்தாள் காதலனுக்கு எழுத்துக் காதலி கிடைத்துவிட்ட – பூரிப்பில் – எப்படி இருவரும் கவிதையாய் சிரிக்கிறார்கள் பார்!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 46

சாப்பிடும்போது உணவில் – பாதியை வைத்துவிட்டு எழுந்தேன்; அம்மா திட்டினாள், அவளுக்கென்ன – தெரியும் நீயும் – இப்படி பாதியில் வைத்துவிட்டுத் தான் எழுந்திருந்திருப்பாய் என்று!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 45

உனக்குமாய் என் எழுதுகோல் எழுதத் துவங்கி விட்டதற்காய் அதற்கு மட்டும் நன்றி சொல்லாதே இதயம் – கோபித்துக் கொள்ளும்!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 44

உனக்கும் எனக்கும் தூரங்கள் நீள்கிறது இதயத்தின் நிழல்கள் கைகளில் விழுந்த படியே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக