Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

45. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

அது ஏனோ உனக்கு அப்படி ஒரு வெட்கம் – சிரித்துக் கொண்டே வெளியே ஓடி வந்தாய் வாசலில் நான் நிற்பதை கண்டதும் – நின்று – தயங்கி – நிமிர்ந்தென்னைப் பார்த்து திரும்பி வீட்டிற்குள்ளேயே ஓடுகையில் சத்தமில்லாமல் சிரித்தாயே அந்த சிரிப்பும் பார்வையும் தவிர வேறொன்றுமே இல்லை நீஎன்னை காதலிப்பதற்கான சாட்சி!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

44. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

உன் கைப்பையில் என்னென்னவோ வைத்திருக்கிறாய் இடையே என் புகைப்படம் கூட வைத்திருப்பதாய் – உன் தோழி சொன்னாள்; உன் காதலின் அர்த்தம் நீ திரும்பிப் பார்க்காமல் செல்வதில் வலிக்கத் தான் செய்தது; சரி போடி என விட்டுத் தான் பார்த்தேன் – நீ அலைந்து அலைந்து என்னை தேடியதில் – உயிர் கொள்கிறது உனக்கான காத்திருப்பு!

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

43. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நம் கல்லூரி வளாகத்தில் – நீ என் பின்னே நடந்து வருகிறாய் அறை முழுதும் கேட்கும் உன் காலடி சப்தத்தில் என் இதயம் – காதல் காதல் என்கிறது!

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

42. இப்படி ஒருமுறை காதலித்துப் பாருங்க!

மனோ: காதலென்றால் என்ன? மகி: எனக்கென்ன தெரியும், நீ தான் அப்படியெல்லாம் பீத்துற பீத்துலடி அசடு நெசம்மாவே நானுன்னை காதலிக்கிறேன் அப்ப நீயே சொல்லு – காதல்னா என்ன? ம்ம்ஹ்..ஹூம் நானென்ன காதல்னா என்னன்னு டிப்ளோமா வரை படிச்சிட்டு வந்தா காதலிக்க முடியும் அப்படியா காதலுக்கு கூட டிப்ளோமா இருக்கா அசடு அசடு அதில்ல சரி … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 12 பின்னூட்டங்கள்

41. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

தாவணியில் – நீ எத்தனை அழகென்று எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை தான்; வானம் பரப்பிய வெளிச்சத்திற்கிடையே நீ மாடியில் இருந்து கையசைக்கும் அழகு எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை தான்; ஜன்னல் ஓரம் நின்று சிரித்து தொலைபேசியில் அழைக்க ஜாடை செய்து விட்டு உள்ளே சென்று நீ வெளியே வரும் வரை நான் வாசலிலேயே காத்திருப்பேன் வெளியே … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்