Category Archives: என் இனிய உறவுகளுக்கு வணக்கம்

என் தமிழரின் பண்பு மாறாது வணக்கம் சொல்லி உள்நுழைந்த பாதை!

வணக்கக் கவிதைகள்; முகநூல் தோழி லல்லிக்கு சமர்ப்பணம்!

பூங்காற்றின் வாசத்தில் என் பெயரெழுதி வைப்பதற்கு பதிலாக உன் பெயரை பரிந்துரைக்கிறேன்; நட்பின் வாசம் – பூங்காற்றெங்கும் பரவட்டும்!! இனிய அன்பு வணக்கம்! ———————————————————————– வீழும் நட்சத்திரங்களாய் இன்றி வாழும் நிலவினை போல் கொண்ட நட்பே.. நல் – இரவு வணக்கம்! ———————————————————————– மீட்டுமொரு வீணையின் இசையாய் உள்ளே ஒரு பாடல் கேட்டுக் கொண்டே இருக்கிறது, … Continue reading

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | Tagged , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

வெள்ளை வானத்தின் மவுனத்திலிருந்து..

வெள்ளை வானத்தின் மவுனத்திலிருந்து – பீரிட்டு வரும் சூரியக் கதிர்களைப் போல் – தான் வரவேண்டும் – ஒவ்வொரு தமிழனுக்கும் அவனுக்கான தமிழ்பற்று! அனைவருக்கும் இனிய அன்பு வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | 4 பின்னூட்டங்கள்

ஒரு நாளின் மவுனங்களில்

ஒரு நாளின் மவுனங்களில் உனக்காக சேமித்து வைத்துள்ளேன் உனக்கான குரலை – ஒரு அன்பு வணக்கம் சொல்ல!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

மஞ்சள் பூத்த சூரியக் கதிர்களின்

காலை பொழுதின் மஞ்சள் பூத்த சூரியக் கதிர்களின் கத கதப்பில் வானம் தொடும் பன்னீர் துளிகளாய் – உங்களின் அன்பினால்; வாழ்வின் அடையாளம் கண்டு கொள்ளும் உங்கள் சகோதரனின் இனிய அன்பு வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | 2 பின்னூட்டங்கள்

என் கவிதைகளுக்கும் காரணமிருக்கிறது..

வீட்டின் எத்தனையோ நிகழ்வுகளை உட்கொள்கிறது – ஒவ்வொரு கவிதையும்; கவிதை படிக்கையில் – காரணங்கள் அத்தனை புரிவதில்லையென்றாலும் – காரணமின்றி ஒரு கவிதையும் கற்பனை குதிரையில் ஏறிவிடுவதில்லை! என் கவிதைகளுக்கும் காரணமிருக்கிறது காரணமில்லையென்றாலும் – கவிதைக்காய் தேடுகிறேன்; கவிதையில் மெய்யிருக்கட்டுமே! இனிய அன்பு வணக்கம் தோழர்களே!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக