Category Archives: அரைகுடத்தின் நீரலைகள்..

வாழ்ந்த அனுபவங்களும்.., வாழ்விற்கான தேவை இதெலாம் எனும் அனுமானமும், வாழ்தல் பற்றி சிந்திக்கவும், வாழ்க்கை பிறப்பு இறப்பு சம்மந்தமானதும்..

90 வாழ்க்கையை படி!

குடிப்பவன் குடிக்கிறான் நல்லவனென நடிப்பவன் நடிக்கிறான், இருப்பவனின் நாற்றம் வெளியில் தெரிவதில்லை. இல்லாதவனின் நாற்றம் பெரிது படுத்தப் படுவதில்லை. இரண்டுக்கும் மத்தியில் பண்பாடு குலைகிறது அநாகரிகம் கூட நாகரீகமென மெச்சப் படுகிறது; காலமாற்றம் என்னும் ஒற்றை பெயரில் – நிறைய பேர் தவறாகவே பதியப் பட்டிருக்கிறோம் – கால ஏட்டில்!!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

91 வாழ்க்கையை படி!

ஊரெல்லாம் மரணமும் மல்லிகை தோரணமும் வேளை வேளைக்கு சோறும் உடுத்த பட்டாடையும் மினுக்க அத்தனையும் இருந்துக் கொண்டு தானிருக்கிறது; இறப்பவரை பற்றியும் அழுபவரை பற்றியும் வருந்தாத இடத்திலிருந்தே – சிரிப்பவருக்கும் – மினுக்குபவருக்கும் மரணுமும் மல்லிகையும் மறுபரிசீலனை செய்யப் படுகிறது!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

92 வாழ்க்கையை படி!

பூமி உருண்டையாம் இருக்கலாம், சுற்றுகிறதாம் இருக்கலாம், இருந்தும் – என்றோ நாம் தொலைத்த விஷயங்கள் பூமி சுற்றி வருகையில் கிடைத்திடாததே வருத்தம் என்கிறோம், ஒன்றை புரிவோம் – நாம் தொலைத்த அனைத்தும் நம்மை சுற்றியே கிடக்கின்றன; தொலைத்ததும் – எடுக்க வேண்டியதும் நாமே; நாமே; மாற்று வழி இல்லாது இயற்கையில் ஏதுமே மறைவதில்லை!!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

93 வாழ்க்கையை படி!

எத்தனையோ ஆனந்தாக்கள் – நம்மை சீர்குலைத்து பாடம் புகட்டுகிறார்கள்; நிறைய வங்கி கொஞ்சம் கொஞ்சமாக நிறைய வாங்கிக் கொண்டு நமக்குக் – கொஞ்சம் தருகிறது; வேளைக்கு சம்பளமும் வாங்கிக் கொண்டு – வேலையையும் முழுதாக செய்யாமல் மேலே லஞ்சமும் வாங்கி பின்பும் நாலுமுறை இழுக்கடித்து செய்து எவனோ கால் மேல் கால் போட்டு அமர்கிறான். இதெல்லாம் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

94 வாழ்க்கையை படி!

காற்றையும் நீரையும் வெளிச்சத்தையும் விலையாக்கிக் கொண்டு விலை கொடுத்து வாங்க ஓடும் – உழைக்கும் – வஞ்சினம் கொல்லும் நம்மை காற்றும் நீரும் வெளிச்சமும் பார்த்து சிரிக்காமலா இருக்கும்??

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக