Category Archives: உடைந்த கடவுள்

கடவுளை ஏற்பதற்கும் மறுப்பதற்குமான நியாயமான காரணங்களே; இங்கே உடைந்த கடவுள்களாய்…

134 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

நெடுஞ்சாலையின் ஓரத்தில் – எழுதிவைக்கப் பட்டுள்ள வாகனக் கட்டுப் பாட்டுத் துறையின் அறிவிப்பு எல்லோரின் வேகத்தையும் கட்டுப் படுத்தி விடவில்லை; நிறைய – விபத்துகளை மட்டும் கணக்கில் வைத்துக் கொள்கிறது!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

133 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

உள்ளூர் நெரிசல்களை தாண்டி நெடுஞ்சாலைகளில் அதிவேகமாய் பயணிக்கும் வாகனங்களுக்கிடையே அறியாமல் ஓடிவரும் சிறுவனை எந்த பிரேக்கும் சாமியும் – காப்பாற்றிவிடுவதில்லை; இரத்தம் மட்டும் – காண்பவரின் இதயத்தை நனைத்துவிட்டு வாகனங்களின் வேகத்தில் காய்ந்தேவிடுகிறது!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

132 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

தெருக்களில் – எத்தனையோ வாகனங்கள் தரையை கிழிக்கும் விதமாய் சீறிப் பறக்கிறது, யாருக்கு என்ன அவசரமோ?? எந்த வண்டி விமானத்தின் கடைசி நிமிட துளிகளின் அவசரத்திற்காய் போகிறதோ, எந்த வண்டியில் ஒரு சகோதரி பிரசவ வலியால் துடிக்கிறாரோ?? எந்த வண்டி இண்டர்வியூ முடியும் கடைசி தருவாய் நோக்கி விரைகிறதோ, எந்த வண்டியில் மரணம் நெருங்கும் யாரோவை … Continue reading

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 131

சொட்டு சொட்டான விசமாக – தெருவிற்கு தெரு குடியும் பெண்களின் மோகமும் அரசியல் சாபமும் போலிகளின் கொண்டாட்டமும் இன்ன பிறவும் இன்ன பிறவும் சேர்ந்திறங்கிக் கெடுத்த நம் வாழ்வின் வெளிச்சத்தை மீட்டுத் தர இன்னொரு தாமஸ் ஆல்வா எடிசனை தேடும் நீயும் நானும் – இருந்தென்ன பயனென்று தான் உதிர்கிறது போல்; என் தலைமுடியில் இரண்டு!

Posted in உடைந்த கடவுள் | 8 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 130

படிக்காத புத்தகத்தை படித்ததாகவே எழும் மனப்போக்கு – நீ பார்கையில் பார்த்து கண் மூடிக்கொள்ளும் மனதிற்குள் வெளிச்சமாய் நிறைகிறது!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்