Category Archives: உடைந்த கடவுள்

கடவுளை ஏற்பதற்கும் மறுப்பதற்குமான நியாயமான காரணங்களே; இங்கே உடைந்த கடவுள்களாய்…

ஹைக்கூ – 114

இழுத்துப் போர்த்திய புடவைக்குள் – மறைக்க இயலவில்லை அவனை; அரவாணி!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 113

எங்கோ ஒரு சாவு மேளத்தின் சப்தம் தொலைவிலிருந்து – கேட்டுக் கொண்டு தானிருக்கிறது நிறைய அழுகுரல்களையும் மரணத்தின் வாசத்தையும் விழுங்கிவிட்டு!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 112

என் – கழுத்திலிருக்கும் தங்க சங்கிலியும் கைவிரல் மோதிரமும் காப்பும் எத்தனையோ ஏழை பெண்களுக்கு கிடைக்காத தாலியை – நினைவுபடுத்தாமலில்லை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 111

நிறைய வீடுகளில் மின்விளக்கும் மின்விசிறியும் வெட்டியாய் எரிந்துக் கொண்டும் இயங்கிக் கொண்டும் தானிருக்கிறது வேறுசில வீட்டின் – வெளிச்சத்தைத் திருடிக்கொண்டு!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 110

சரியில்லை எனத் தெரிந்தும் அறுத்தெறிய மறுக்கிறது பல மடமைகளை – என் மூதாதையர் வளர்த்த புத்தி!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக