Category Archives: உடைந்த கடவுள்

கடவுளை ஏற்பதற்கும் மறுப்பதற்குமான நியாயமான காரணங்களே; இங்கே உடைந்த கடவுள்களாய்…

ஹைக்கூ – 99

மனிதன் – நினைத்துக் கொண்டான் அவன் தலைக்குச் சூடிய பூவும், பூஜைக்கு வைத்த மலர்களும் பேருகொண்டதாய்; பூக்கள் – நினைத்துக் கொண்டன மனிதன் பறித்த பூவும் கிள்ளி – மாலையில் தொடுத்த மலர்களும் இறந்துப் போனதாய்!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 98

பூக்கள் ஆயிரம் பூக்கின்றன; ஒருசில பூக்களே நுகரப் படுகின்றன!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 97

மனிதனை மனிதன் வெட்டினால் – தெருவில் போகும் நாய் கூட குறைக்கிறது; எதிர் வீட்டிலிருப்பவன் – மரங்களை வெட்டினான். ஒன்றை கூட என்னால் தடுக்க முடியவில்லை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 96

மரமும் – செடியுமென் ஜாதியென நினைக்கும் நான் – தெருவில் ஆங்காங்கே பட்டுப் போகும் – மரத்திற்கான சோகத்தை ஏனென்று கேட்பதேயில்லை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 95

என் எழுதுகோலை பிடுங்கிக் கொள்வதாய் எதிரே நின்று – நிறைய பறவைகள் கத்துகின்றன; என்னை பற்றியும் எழுது – என்கின்றனவா, என்னிடம் – பாடம் கேள் என்கின்றனவா புரியவில்லை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக