Category Archives: எத்தனையோ பொய்கள்

சின்ன சின்ன வார்த்தைகளில்; மறைக்க விரும்பாத உண்மைகள்..

ஹைக்கூ – 19

போ..போ.. நீ பார்க்கும் ஓரக் கண் பார்வையால் தான் என் பெயர் – தெரு பொருக்கி ஊதாரி’ யானது!.

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 18

ஒவ்வொரு – வெண்சுருட்டிற்குள்ளும் வெளியில் தெரியாமல் எரிகிறது எங்கோ பீடி சுழற்றும் ஒரு குழந்தை தொழிலாளியின் எதிர்காலம்!!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 17

வெள்ளித் திரையில் கதாநாயகன் கதாநாயகியின் ஆட்டம் இரண்டு பக்கத்திலும் சேலையின்றி ஆடும் தேவதைகள் வெற்று ரவிக்கையில் – வீழ்கிறது தமிழச்சி மானம்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 16

நிறைய கட்டிடங்களில் புதைந்திருக்கிறது சில கொத்தனார்களின் காதல் கதை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 15

பிசாவும் பர்கரும் தின்றதில் செரிக்கவேயில்லை; சிறுவயதில் தின்ற நிலா சோறின் ஞாபகம்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக