Category Archives: கண்ணீர் வற்றாத காயங்கள்..

எழுதாத தலையெழுத்திற்கு, அழுதுத் தீர்த்த தருணத்தை; எழுதியேனும் வைக்கத் துணிந்தப் பதிவு..

3 முள்ளிவாய்க்காலிலிருந்து…

ஒரு நூறு தெரு தள்ளி தான் கேட்கிறதந்த சப்தம்; கண்ணீரால் யாரையோ கூப்பாடு போட்டழைக்கும் ஒரு ஓலம் அது; சுலபமாய் சொன்னால் மரணம் எனலாம், வாழ்பவன் கற்றும் தெளியாத அல்லது – கற்காத பாடம். மரணம் என்றாலே நெஞ்சை உலுக்கும் பயத்திற்கு மரணமின்றியே இயங்குகிறது நிறைய சதைகள்; ஆம், ஜாதி பேசி மதம் பேசி இனம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

2 கல்லறைகளின் மீதாவது உறங்கி; உயிர்திருப்போம்!

எம் சுவாச மூச்செலாம் வெடிகுண்டு நெடியில் விசமேறிப் போயிருந்தும் – விடுதலைக்கென்றே உயிர்சுமந்துத் திரிகிறோம்: தெருக்கள் நெடுகிலும் உலாவந்த எம் சின்னஞ்சிறு குழந்தைகளெல்லாம் வீழ்ந்த குண்டுகளில் சிதைந்துப் போனாலும் தெருவின் கடைகோடி வீட்டின் – ஒற்றை உயிருக்காய் விடுதலை கோரி நிற்கிறோம்; பசுமை குன்றியிரா எம் தேச நிலங்களிலெல்லாம் – கன்னி வெடிகளே புதைந்திருந்தாலும் எடுத்து … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

Happy New Year – தமிழன் தானென் உலகமெனில்

ஏய்.. பயங்கர வாத சமூகமே என் மீது காரி உமிழ்வாய் என் கருவருப்பாய் என்னினம் பங்கமுற்று அழிய கொல்லி ஈட்டுவாய் நான் எள்ளி நகைக்கவா????? ஏனென்று கேட்டால் என்னை தீவிரவாதி என்கிறாய்; நீ சுட்டுப் பொசுக்குவாய் புதைகுழிக்குள் உயிரோடு புதைப்பாய் மலை போல் என் மனிதர்களை கொட்டி எரிப்பாய் வெறி வந்தால் வீடேறி கற்பழிப்பாய் என் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | 4 பின்னூட்டங்கள்

1. ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள்”

புறா யாரேனும் தூது விட்டால் பல்லாயிரக் கணக்கான மைல்களை பறந்து – கடப்பாயாமே புறாவே; நானொரு – ஈழ மகள், என் மகன் எங்கேனும் தொலைந்தாவது; இறந்தாவது; கிடக்கிறானா பார்த்து சொல்வாயா? அவள் கதறிவிட்டு மீண்டுமந்த புறாவிடம் – சொன்னாள் “இன்னொன்றையும் கேள் புறாவே.. ஒருவேளை அவன் சிங்களனுக்குப் பயந்து எங்கேனும் ஒளிந்திருந்தாலோ; சிங்களனின் குண்டு … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக