Category Archives: கல்லும் கடவுளும்..

7, மறுபடி பிறந்தாலும் அந்தத் தெருவில் பிறக்கவேண்டும்..

ஒரு காலஇடைவெளியின் கண்களோடுத் திறக்கிறது எனக்கான பார்வை.. நெடுங்காலத்திற்குப் பிறகு மீண்டுமந்த பழைய ஊருக்குச் செல்கையில் மரங்கள் வெட்டப்பட்டிருந்தன ஜூலி இறந்துப் போயிருந்தாள் மாடுகள் வளர்ப்பு அறவே அங்கு காணோம் ஆடும் கோழிகளும் கறிக்காக மட்டுமே கொண்டுவரப்பட்டது முருகன் அண்ணன் இறந்துப் போயிருந்தார் இட்டிலி விற்கும் ஐயா காய்கறி மாமா யாருமில்லை அங்கு.. யாருமில்லா அந்தத் … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மழை; மழையதை வேண்டு..

மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்; மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை மழையில் நனைந்ததுண்டா நனையாதவர்கள் நனைந்துக் கொள்ளுங்கள்; மழை வரும்போது அண்ணாந்து முத்தமிடுங்கள்.. நாமுண்ணும் ஒவ்வொரு … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சொல்லிக் கொள்ளலாம் ‘நாம் சரியாகத் தானிருக்கிறோம்’

யதார்த்தமாக சுயம்புவாக சுழலும் உலகமிதை தனக்கு வசியப்படவேண்டி மனிதனிட்ட கோடுகளின் வழிதான் அழிகிறது நம் உண்மை முகங்கள்; கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற ஓட்டைகளையிட்டே நிகழ்த்தப்படுகிறது அநீதிக்கன வாசலடைப்பும் அவைகளுக்கான அளவீட்டுத் திணிப்புக்களும்; சரி தவறு சிக்கல்களிலிருந்தே மாறுபடும் மனிதனுக்கு விலங்கும் புரியாமல் கடவுளும் புரியாமல் சாகும்வழியே கொஞ்சம் வாழ்ந்துகொள்வது புரிவதேயில்லை; புரிவதேயில்லை; சாட்சிக்கு நான்கு … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..

கவிதை வெளிவராததொரு வலி தெரியுமா? பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல அமரும் மௌனத்தின் கணம் கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு., ஒவ்வொரு வார இதழ்களின் பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப் புரட்டுகையில் தனது கவிதை வெளிவராத இதழ் தீயைப் போலே உள்ளே இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது., … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒழுக்கம் விழுப்பம் தரும்..

ஒரு காலதவத்தின் வரம் கடவுள் கற்பிக்கும் கடவுளர் குணம்; காற்றின் அசைவிற்கும் காரணம்  புரிவிக்கும் பலம்; ஒழுக்கம்! உண்மை நேர்மை கண்ணியத்தின் வெளிப்பொருள், மானுடப் பூச்சிக்கு முளைக்கும் மனித சிறகு; மாந்தரின் அஞ்ஞானத்தை மனிதம் வலிக்காமலகற்றும் பெருவழி; ஒழுக்கம்! விலங்கின் ரத்தம் சொட்டும் நாக்கிலும் மதிப்பூறும் உயர்ந்த மனித வாசம்; மானுடத்தின் பெருமித பிறப்பின் அடையாளம்; … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்