Category Archives: காதல் கவிதைகள்

காதலின் மறக்காத பொழுதுகள் – 51

இந்தா – உனக்கான ஒரு சொட்டுக் கண்ணீர் பரிசு. எதுவுமே எழுதிடாத வெள்ளை தாளில் நம் அத்தனை நினைவுகளையும் ஒரு சொட்டுக் கண்ணீரால் நனைத்து அனுப்புகிறேன். வாசலில் காத்திருந்து வந்ததும் சிரிப்பில் வரவேற்று சாப்பிட்டாயா என்பதை சைகையில் விசாரித்து பேசினால் மேல் மாடியில் கேட்டு விடுமோயென இதயம் துடிக்கும் சப்தங்களோடு கட்டியனைத்திருந்த நாட்களை எல்லாம் ஒரு … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 8 பின்னூட்டங்கள்

50. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

காவியங்களாய் பல காதல் – காலங்காலமாய் உண்டு! கால்கொலுசின் சப்தம் கேட்டு காதல் வந்த நம் உள்ளூர் கதைகளும் உண்டு! ஜாதி எரிந்து உயிர் கொளுத்திய அரக்கத் தன – சம்பவங்களும் உண்டு! மதம் தனக்கு இரையாக்கிக் கொண்ட காதலர்களின் கதறலில் பெற்றோர் – தனக்கான மானத்தை மட்டும் வென்று மனிதம் கொன்ற அவலமும் உண்டு! … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 25 பின்னூட்டங்கள்

49. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

பேருந்தில் – நீயும் நானும் அருகருகே அமர்ந்து செல்கிறோம் – மனதளவில் தூரம் தான் வானமும் பூமியுமாய் நீள்கிறது. வா ஒரு சின்ன தொடுதலில் பேசலில் முத்தமிடலில் மனமொன்றி வாழ்தலில் வானத்தையும் பூமியையும் ஒன்றாக்குவோம்; வா!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

48. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

எத்தனை லட்சியங்கள் உனக்கும் எனக்கும்; படிக்க வேண்டும் நன்றாக வளர வேண்டும் சமூகம் புரியவேண்டும் எதையேனும் சாதித்து – நான் – இன்னார் பிள்ளையென்று சொல்லல் வேண்டும் திருமணத்திற்கு முன் என் உறவுகளுடனான இருப்பை முழுதாய் வாழவேண்டும் என் அன்பில் பிணைந்தென் குடும்பம் உன்னை முழுதாய் ஏற்கும் வரை உனக்காய் – காத்திருக்கவும் வேண்டும். இதலாமென்ன … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்

47. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

உலகெல்லாம் எத்தனையோ பேர் காதலிக்கிறார்கள்; காதலில் தோல்வி என்கிறார்கள்; காதலால் தற்கொலை என்கிறார்கள்; காதலித்தால் தனிக் குடும்பமாய் போவோம் என்கிறார்கள்; காதல் ஏதோ கொடுப்பதும் வாங்குவதும் என்கிறார்கள்; அதலாம் தான் காதலென்றால் – யாரேனும் கேட்கும் போது நீயும் நானும் காதலிப்பதாய் சொல்லவே சொல்லாதே. காதலிப்பது – யாரிடமும் சொல்வதற்கல்ல காதலிக்க. காதலென்பது – எனக்கும் … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்