Category Archives: காதல் கவிதைகள்

31. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ என்னருகில் வந்து என்னை கடந்து செல்கையில் உன் வாசமும் என் வாசமும் காற்றில் கலந்துத் தான் போனது!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

30. இது ஒரு காதல் க(வி)தை!

கண்ணாடியின் அழகு உனை கண்ட பிறகு தான் தெரிந்தது. அதிலும் நீ உன் கண்ணாடியை மேலுயர்த்தும் போது லேசாக எச்சில் விழுங்கி பாதி சிரித்து இன்னொரு கையில் நெற்றியில் விழுந்த முடியை தள்ளிவிடும் அழகு அழகு தான்; அப்போதெல்லாம் உனை ரசித்த ரசிப்பின் ஈர்ப்பில் தான் நீயும் நானும் – கல்லூரியிலிருந்து வீடுவரை இச் சமூகத்தின் … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்

29. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

சற்று – நிமிர்ந்து பார்.. பாரடி; என் முகத்திலென்ன முட்களா பதித்திருக்கிறேன் நீ பார்த்தால் – குத்திவிட; பார்.. பாரடி; நீ நீட்டி முழக்கிய காதல் – ஸ்வாரஸ்யங்களுக்கு யார்வந்து – தடை சட்டம் போட்டார்களோ போட்டிருக்கலாம், நானென்ன செய்தேன்? பார்த்தாய் – சிரித்தாய் – பேசினாய் – நான் காதலொழுகப் பேசியதை ரசித்தாய் – … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

28. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நிலம் நீர் காற்று வானம் நெருப்பை – ஐம்பெரும் பூதம் என்கிறார்கள்; காதல் – ஆறாம் பூதம். ஆம்; காதல் இல்லையேல் நீயும் நானும் – அன்றே இல்லை!

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

27. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

அதுசரி – எந்த புள்ளியில் நாம் காதலிக்கத் தயாரானோம்? நினைவில்லையென்றாலும் பரவாயில்லை – இந்த புள்ளியை நினைவில் கொள்; இந்த புள்ளி – ஒன்று நம் வாழ்வு அல்லது – மரணம்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக