Category Archives: ஞானமடா நீயெனக்கு

ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே எண்ண தவிப்பு இருந்து விடும் அன்பை தவிர? அந்த அன்பினை எழுத்தால் சுருக்கி, அதற்கு ஞானமடா நீயெனக்கென புத்தகம் சார் முகமாக பெயரிட்டுள்ளேன்.. படித்துவிட்டு பேசுங்கள். மிச்ச்ள்ளமுதை மீண்டும் மறு பதிப்பாக்குவோம்!!

ஞானமடா நீயெனக்கு – 24

பத்து மாதமெனும் நீண்டதொரு சுமப்பின் எல்லையில் நீ வந்தாய், உன்வருகைக்குப் பின் ஏதும் – அத்தனை சுமையில்லை உன் அழுகையை தவிர!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 23

நீ – என்பதன் அர்த்தம் உலகம் வானம் பூமி கடல் காற்று தென்றல் அருவி மழை மலர்வனம் மெல்லிசை பாடல் கவிதை புத்தகம் வியப்பு பலம் அதிஷ்டம் நிம்மதி ஏதுமில்லை – குழந்தை என்பதொன்று பெரிது!!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 22

முத்தம் கொடு என்றால் உதட்டை கன்னத்தை பிடித்துக் கடிக்கவோ – எச்சிலொழுக பார்த்து சிரிக்கவோ மட்டுமே தெரியுமுனக்கு; அதை தாண்டி முத்தமென்றால் இப்படியென சொல்லாமலேயே – வரிசையில் நிற்கிறோம் நானும் – உன் அம்மாவும் உன் எச்சிலில் நனைந்த அந்த -முத்தத்தின் அன்பிற்காய்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 21

காலையிலெழுந்ததும் கடவுளை பார்ப்பது நல்லதென்பதில் எத்தனை உண்மை உள்ளதோ; உன்னை பார்ப்பதில் எத்தனை எத்தனை பரவசமுள்ளதடா…

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 20

படுக்கையில் – தலையணை, மெத்தை போர்வைக்குப் பின்னும் உன் புதிய வருகையால் ஏற்பட்ட சின்ன இடைவெளியை, இருவரையும் சேர்த்து நீ அனைத்துக் கொண்ட இறுக்கத்தில் – நீயாகவே; தீர்த்துக் கொண்டாய்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக