Category Archives: தமிழீழக் கவிதைகள்

என் தேசம் எனது மக்கள் சார்ந்த வலிகளும் வருத்தங்களும் கோபமும்..

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (39)

இறந்த என் வீரர்களுக்கும் உறவுகளுக்கும் விளக்கேற்றி விளக்கேற்றி வைக்கிறேன்; கண்ணீர் அனைத்து அனைத்து விடுகிறது. உலகிற்கு எங்களின் இருட்டு மறைக்கப் பட்டு வெளிச்சம் மட்டுமே தெரிகிறது போல்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (38)

ஒன்று இரண்டு மூன்றேன்று சுட்டிருப்பானோ சிங்களவன்?!! சுடும்போது ஏதேனும் ஒரு குரல்கூடவா அவன் உறவை அவனுக்கு நினைவுருத்தவில்லை; போகட்டும், நம் சமர் – எவனை கொல்வதுமல்ல ஈழம் – வெல்வது மட்டுமெனக் கொள்வோம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (37)

தேச ஜாம்பவான்களே வாருங்கள்; முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் ஒரு விளக்கேற்றிச் செல்லுங்கள்; உம்மோடு – மனிதராய் பிறந்ததற்கு ஒரு விளக்காகவேனும் எறிந்துவிட்டுப் போகட்டும் எம் உறவுகள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

36 முள்ளிவாய்க்காலுக்கு அப்பால்!!

ஈழ விடிவு நோக்கி இடையுறாத காத்திருப்பிற்க்கிடையே விதி ஏற்று – குடும்பம் சுமந்த சுயநல பிறப்பாய் வந்தேறிய தமிழக தெருக்களில் தள்ளாடுகிறது என் கால்கள்; ஒரு – மழை படராத சுவற்றில் வர்ணப் பூச்சுகள் உதிர்ந்த சுவடுகளுக்கிடையே ஏனோ லயிக்கிறது மனசு; என் உடைபடாத வார்த்தைகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் கண்ணீர் குவியலில் யார் யாரை நான் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

35 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

மொழி இனம் மதம் யாராகவேனும் எதுவாகவேணும் இருந்துவிட்டுப் போகட்டும் ஒரு மனிதராகக் கூட என்னாது – சுட்டு சுட்டு எறிந்த சிங்களனக்கு துணைபோன தேசத்தில் தான் நானும் குடிமகன்; தமிழன் வேறு; மனிதன் என்று சொல்லத் தான் எனக்கே வெட்கம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 3 பின்னூட்டங்கள்