Category Archives: தமிழீழக் கவிதைகள்

என் தேசம் எனது மக்கள் சார்ந்த வலிகளும் வருத்தங்களும் கோபமும்..

ஒன்று படுவோம்; உலகிற்கே போதிப்போம்!

இன்னுமொரு குரங்கின் மனோபாவத்திலேயே பரிமாண வளர்ச்சி பற்றி பேசியும் எழுதியும் கொள்கிறான் மனிதன். இரண்டில் எது சரி என்று யோசித்த இடைவெளியில் எத்தனை மனிதர்களை இழந்து விட்ட இனம் நம்மினம். இன்று ஏதோ ஒன்று முடிந்துவிட்டதாய் என்னவோ தன்னால் நடந்துவிட்டதாய் – பிணங்களின் மண் மூடிய தரையில் அமர்ந்து, அடிமை சிறையில் அகப்பட்ட எத்தனையோ தமிழர்களின் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 4 பின்னூட்டங்கள்

போராடுவோம்; போராடுவோம்!

மாவீரர் நாள்! இறந்தவர்களின் சமாதிகளை நனைக்கிறது கண்ணீர், சமாதிக்குள்ளிருந்து எழுந்து கண்ணீரை துடைத்தெறிந்து விட்டு துப்பாக்கி தூக்கி சல்லடை சல்லடையாக்கி சிங்களரை விரட்ட ஈழம் மீட்க துடிக்கிறது கைகள். இயற்கையின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கி போனதால் இனி புதியதாய் பிறக்க திட்டமிடுகிறார்கள் போல், சமாதிகள் அமைதியாகவே காட்சியளித்தன. வருந்தாதீர் உறவுகளே, மாவீரர்கள் – அன்றும் உறங்கவில்லை இன்றும் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

சிவதீபனுக்கோர் சபதம் கேள்!

வன்னித் தீவின் தளபதியே நெஞ்சுக் கூடெரித்து நஞ்சுண்ட தீபமே ஆணையிரவில் ஆணையிட்டு – புலிக்கொடி நாட்டிய பகிரதா – கேட்கிறதா??? எல்லி நகைத்தவரிடம் சொல்லி அடித்த வீரமே இருபத்தைந்து ஆண்டில் புலிகளின் வளர்ச்சியோடு வளர்ந்த போர்புயலே – கேட்கிறதா??? சிங்களனாயிரம் சங்கருத்து முல்லைத் தீவுபிடித்து புலித்தலைவனின் படைக்கு மீண்டுமிரண்டு பீரங்கி பரிசளித்த சிவதீபமே – கேட்கிறதா??? … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

என் ஜன்னலோரத்தில்.. ஈழம்!

என் ஜன்னலோரத்தில் நுழைந்த சப்தம் காதை எரிக்கையில் – ஜன்னல் திறந்து – சற்று வெளியே பார்க்கிறேன் அதோ – ஈழமொரு சொட்டு நம்பிக்கையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது, உலகம் எங்கோ தன் தலையை திருப்பி வலியவன் தோள் தேடி அலைகிறது, ஓடி – ஒரு வார்த்தை ஏனென்றுக் கேட்டிடவோ – என் உயிர் தந்து தேசம் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

காற்றில் கலந்த ஈழப் புரட்சி – பொன்னம்மான்!

நீ சிரித்துப் பாடிய பாட்டெங்கே உன் சிரித்த முகமெங்கே நீ வளர்த்த வீரமிங்கே – கண்ணீர் விட்டழுகிறதே; உன் கருணை முகமெங்கே காற்றில் தீராத உன் பாடல் – தொலைந்துப் போனதெங்கே விடியாத ஈழ இருட்டில் மேலும் – நீ பிரிந்த சேதி வலிக்கிறதே; பெற்ற – தாய் காட்டுமுன் பாசமெங்கே கொதித்தெழுமுன் கோப துடிப்பெங்கே … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்