Category Archives: பறக்க ஒரு சிறகை கொடு..

ஒரு காதல்; காதலின் நினைவு; முதல் காதலின் வலி; முழு வாழ்க்கைக்குமாய் பயணிக்கும் காதலின் வெற்றியும் தோல்வியுமாய் நாம் என்னும் உணர்வுகளே ‘கவிதை இலக்கணம் கடந்து, இங்கே கவிதைகளென்று தன்னை அடையாள படுத்திக் கொள்ளத் துணிகிறது!

26 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

கோவிலில் பிரசாதம் தருகிறார்கள். நீ ஓடிவந்து ஓடிவந்து வாங்கினாய். நான் கூட ரொம்ப பசியோ என்று நினைத்தேன். பிறகு வெளியே வருகையில் எனை வாழ்த்திய பிச்சை காரர்களால் புரிந்தது – நீ எனை பார்க்கத் தான் அத்தனை முறை வந்து போனாய் என்று!! —————————————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

25 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

வா.. அந்த மரத்தில் ஒரு சொப்பு தூளி கட்டி அதில் காகிதம் சுற்றி அந்த காகிதத்தில் உன் பெயரையும் என் பெயரையும் எழுதினால் சாமி நம்மை சேர்த்து விடுமாம்; நாமும் கட்டி வைப்போம் நம் சமூகம் ஒருவேளை நம்மை பிரித்துவிட்டால் இந்த சொப்பு தூளி – நம்மை காதலர்களென்று சொல்லியே ஆடிக் கொண்டிருக்கும்!! ——————————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

24 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

அதோ அந்த மரத்தடியில் கொஞ்சம் அமர்ந்து போவோம் வா.. மரக் காற்றின் நினைவுகளில் நம்மை காதலர்களாய் நினைவு கொண்டிருக்கும் மரம்!! ——————————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

23 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

எத்தனையோ இலைகள் உதிர்ந்துக் கொண்டே இருந்தும்; ஏதோ ஒரு இலையில் மையம் கொண்டு மனசு விழாதென்று நம்புவதாகவே – தோற்கும் நிறைய பேரை பார்த்தும் நாம் மட்டும் தோற்கமாட்டோம் என்றே நம்புகிறது நம் காதல். நம் காதலின் வெற்றி சேர்தலில் மட்டுமல்ல நாம் பிரியாதலிலுமென்று எண்ணிக் கொள்வோம்!! ———————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

22 எப்படியோ நிகழ்கிறது காதல்..

கோவில் திருவிழாவில் எல்லோரும் சாமி வருமென காத்திருக்கிறார்கள்; நானும் சாமியோடு நீ வருவாயென காத்திருக்கிறேன்! —————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்