Category Archives: பிரிவுக்குப் பின்!

மூன்று முடுச்சில் இறுகிய இதயங்களின் துடிப்பு..

பிரிவுக்குப் பின் – 32

உன்னிடம் நூறுமுறை காதலிக்கிறேனென்று சொல்ல ஆசை ஒரு முறை கூட சொன்னதில்லை – எங்கே, இதயங்கள் தான் ஒன்றோடொன்று – இதழோடு இதழ் போல ஒட்டிக் கொள்கிறதே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 31

பேசிக் கொண்டு தானிருக்கிறாய் இதயங்கள் மட்டும் இடையே – உனக்கும் எனக்கும் தெரியாமல் உன்னையும் என்னையும் மாறி மாறி தொட்டுக் கொள்கிறது; குவைத்தின் – இரண்டாயிரம் மைல் தூரம் இடையே – ஒன்றுமே செய்ய வில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 30

உன் மீதெழுந்த ஒரு சின்ன்ன்னன்ன… கோபத்திற்காய் – என்னை நானே தண்டிக்கிறேன் உன்னிடம் பேசாதிருந்து!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 29

காலத்தில் தவழும் உலகிற்கு மத்தியில் நான் மட்டும் தான் நொடிகளை கூட உனக்குள் கடக்கிறேன்!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 28

இன்று நம் திருமண நாள் – தினமும் இரவின் நடுநிசியிலாவது யாருக்கும் தெரியாமல் அழுதுவிடும் நான் – இன்றாவது அழவேண்டாமென நினைக்கிறேன்; தயவுசெய்து இன்று கனவில் ஊருக்கு வாவென அழைத்து விடாதே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக