Category Archives: பிரிவுக்குப் பின்!

மூன்று முடுச்சில் இறுகிய இதயங்களின் துடிப்பு..

பிரிவுக்குப் பின் – 27

முத்தம் கொடுக்கும் ஆசையிலேயே வாழ்க்கை – கணக்க முகம் பார்கவே வருடம் இரண்டு ஆகுதடி; காமம் தலைக்கேறி அமர்ந்து உடல் வருத்தியும் – உள்ளம் உனக்காக உனக்காக – உனக்காகவே நரை தின்று வாழுதடி! குளிர்பெட்டி தின்ற மிச்ச மீதியில் உடல் கட்டை பிழைக்குதடி – இது வாழ்க்கை இல்லை – விதிதானே நிமிஷம் கூட … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 4 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 26

இருபத்தி நான்கு மணி நேரத்தில் எங்கு திரும்பினாலும் – என் இதய முட்களில் இன்பமாய் நீயடி..! காற்றின் சிறகு பிடித்து உயிர் வரை சென்று பார்க்கையில் – இதய தெருக்களெல்லாம் வெளிச்சமாய் நீயடி..! இரவில் உறையும் உணர்ச்சிகளில் உயிர் கொள்ளும் வழியிலும் – எனது கண்ணிய நெருப்பாய் காப்பவள் நீயடி..! இரத்தம் கொதிக்கும் வெப்ப மூச்சின் … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 8 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 25

நீ நான் என்பதில் – அதிக வேற்றுமையில்லை; பெண் ஆண் என்பதைத் தவிர!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 24

பெரிய பெரிய அதிசயங்கள் – இப்படித் தான் நிகழ்கின்றன; நீயும் நானும் நேருக்கு நேர் சந்தித்தோம் கனவில்!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 23

உலகின் – ஏதோ ஒரு மூலையில் உனை விட்டுப் பிரிந்து எங்கோ – கடை கோடி தூரத்தில் அலைகையில் மனம் – ஏதோ ஒரு பெண்ணின் பார்வையையாவது திருடித் தான் கொள்கிறது; ஆனால், உனக்கான இடம் மட்டும் இதயத்திலிருந்து உயிர் வரை சற்றும் குறையாமல்!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக