Category Archives: பிரிவுக்குப் பின்!

மூன்று முடுச்சில் இறுகிய இதயங்களின் துடிப்பு..

பிரிவுக்குப் பின் – 22

இன்று சம்பளம்! வாங்கிய உடனே உனக்கனுப்பினேன் அம்மாவிற்கு அனுப்பினேன் அக்கா வீட்டிற்கும் – தங்கச்சி சீதன பணமும் அனுப்பினேன் அண்ணன் குழந்தைகளுக்கு ஏதேதோ கேட்டிருந்தார் வாங்கியனுப்பினேன் எல்லாம் முடித்துவிட்டு வந்து படுக்கையில் வீழ்கையில் – அப்பாடா என்றொரு நிம்மதி; அவைகளை எல்லாம் தாண்டி – தனிமை இரவின் தவிப்பில் – தலையணை நனைத்த ஒரு சொட்டுக் … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 21

கோடி நட்சத்திரங்களில் உயிர் பெற்றாவது ஒன்றாக நீயிருக்க மாட்டாயா…? உள்ளிழுக்கும் – உயிர்வரை சுவாசத்தில் சிறு காற்றாக நீயிருக்க மாட்டாயா…? பொங்கும் கடலெங்கும் – அலை முட்டும் கரையிலாவது – உன் காலடிச் சுவடுகள் தென்படாதா..? உயிர் குத்தி விழியசையும் காட்சிகளிலெங்கிலும் – நீயாக நீயாக – நீயாக இருக்கக் கூடாதா..? உயிர் கொள்ளும் இதய … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 20

இன்று நம் குழந்தைக்கு பிறந்த நாள்; ஏதேனும் நல்ல பரிசாக வாங்கிக் கோடு – தயவு செய்து இன்றொரு நாலாவது ‘அப்பா இன்று வந்துவிடுவேனென்று’ சொல்லி ஏமாற்றாதே! ——————————————————-

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 19

உனக்கும் எனக்குமிடையே நான்காயிரம் மயில்கள் தூரத்தில் நகர்கிறது வாழ்க்கை; நம் அக்கம்பக்கத்தார்களுக்குத் தான் நான் ஃபாரினிலிருந்து – செண்டு வாங்கிவரவில்லை யெனக் கவலை! ————————————————————

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 18

கவலை படாதே.. இந்த முறை நான் ஊருக்கு வந்தால் அங்கேயே தங்கி விடுகிறேன்; ஏன் சிரிப்பு??? இப்படி சொல்லி சொல்லித் தான் பத்து வருடங்களை – இங்கேயே கழித்து விட்டேனோ; பரவாயில்லை – வருத்தப் படாதே நாம் தொலைத்த ஆசைகளின் வருமானத்தில் – நம் பிள்ளைகளின் வாழ்கையையாவது நம்மூரிலேயே வாங்கித் தருவோம்! ———————————————————–

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக