Category Archives: பிரிவுக்குப் பின்!

மூன்று முடுச்சில் இறுகிய இதயங்களின் துடிப்பு..

பிரிவுக்குப் பின் – 17

இன்று எனக்குப் பிறந்தநாள் புது துணியுடுத்தி எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து தொலைபேசியில் எல்லோரிடமும் வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து கண்ணாடி பார்கையில் கண்களின் ஓரம் – ஒரு சொட்டுக் கண்ணீர் சுட்டது; தூக்கம் கலைவதற்குள் நீ வந்து என் காதுகளில் கிசுகிசுக்காத பிறந்த நாள் ஒரு பிறந்த நாளா! ———————————————————

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 16

தொலைபேசியில் பேசும்போது – ஏதோ நீ பேச வந்ததை பாதியில் நிறுத்தினாய்; நாம் கடந்த இரவுகளின் மிச்ச ஆசைகள் என்று நினைக்கிறேன்; தயவுசெய்து – கடிதத்தில் கூட அவைகளை எழுதிவிடாதே, இன்னும் – ஒன்றரை வருடத்திற்கு மேல் சுமக்க எனக்கு பலமில்லை! ——————————————————–

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 15

நாட்கள் பல கடந்த பின்பும் நான் மட்டும் – அங்கேயே நிற்கிறேன்; உன்னை- விட்டுப் பிரிந்த அந்த – கடைசி நொடிகளில்!! ———————-

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 14

நெடுந்தூர பயணத்திற்குப் பின்னும் – உன்னைவிட்டு நான் பிரியவேயில்லை; சிரிக்கிறார்கள் சிலர் நான் – சொல்வதை கேட்டு! ————————-

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 13

வாழ்வின் அத்தனைத் துயரத்திற்கு மத்தியிலும்; எப்படி இனிக்கிறதோ உன் முத்தம்! ———————-

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக