Category Archives: பிரிவுக்குப் பின்!

மூன்று முடுச்சில் இறுகிய இதயங்களின் துடிப்பு..

பிரிவுக்குப் பின் – 7

உனை விட்டுப் பிரிந்து – கடக்கும் நொடிகளில் ஒவ்வொன்றாய் – வீழ்கிறது; நீயுன் நானும் சேர்ந்திருந்த போது சேர்த்துவைத்த – அத்தனை ஆசைகளும்! ———————— பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 6

யாரும் பார்த்துவிடும் முன் – துடைத்துக் கொண்டேன்; வழியும் கண்ணீரில் யாருக்குமே தெரியவில்லை உன்முகம்! —————– பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 5

நீ நான் என்பதில் – அதிக வேற்றுமையில்லை; பெண் ஆண் என்பதைத் தவிர! —————– பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 4

நாட்கள் பல கடந்த பின்பும் நான் மட்டும் – அங்கேயே நிற்கிறேன்; உன்னை- விட்டுப் பிரிந்த அந்த – கடைசி நொடிகளில்!! ———————- பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 3

நெடுந்தூர பயணத்திற்குப் பின்னும் – உன்னைவிட்டு நான் பிரியவேயில்லை; சிரிக்கிறார்கள் சிலர் நான் – சொல்வதை கேட்டு! ———————- பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக