Category Archives: பிரிவுக்குப் பின்!

மூன்று முடுச்சில் இறுகிய இதயங்களின் துடிப்பு..

பிரிவுக்குப் பின் – 56

ஒரு சில பொய்களில் ஜெயிக்கிறது சிலரின் – உண்மையற்ற வாழ்க்கை; நானென் உண்மையை உன் பொய்யற்ற அன்பில் வெல்ல நினைக்கையில் – உனக்கும் எனக்குமிடையே குவைத்தும் இந்தியாவுமாய் எத்தனை பெரிய தூரம்!!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 55

உறங்குவதற்கு விளக்கை அணைக்கும் ஒவ்வொரு இரவிலும் – விழித்துக் கொண்டு அலறுகின்ற உன் – அத்தனை நினைவுகளால் உறங்காமலே பூக்கின்றன கனவு பூக்கள் – படுக்கையை நனைத்த கண்ணீரின் ஈரத்தில்!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 54

நினைவின் பயணங்கள் தான் எங்கெங்கோ.. அதில் நீளும் பயணமாய் நீயும் உன் பிரிவுகளும்; வெறும் – பயணமாக மட்டுமின்றி உயிரின் இயக்கியாய்.. சிரிப்பின் அர்த்தங்களாய்.. வாழ்வின் அவசியமாய்.. வாழும் அர்த்தங்களுக்கு – அவ்வப்போது சுகமும் பிரிவின் வலியையும் கற்பிப்பவளாய் நீ.. நீ.. நீ மட்டுமே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 53

நீயில்லாத வருத்தத்தில் வாழ்க்கை நகர- உன் பிரிவின் துயரம் வானமும் பூமியுமாய் – நீண்டு விரிகிறது!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 52

நான் – வெளிநாடு வந்து சில வருடங்கள் ஆகிறது இம்முறை – திருமணக் கனவோடு ஊர் செல்கிறேன்.. ஊரில் எனக்கென்று முன்னதாகனவே பெண் பார்த்து வைக்கப் பட்டுள்ளது. முதன் முதலாய்.. நானும் அவளும் சந்திக்கிறோம் இன்றெனக்கு நிச்சயதார்த்தம். அடுத்த சில தினங்களில் திருமணமும் முடிய.. காதல் பறவைகளை போல் வாழ்வைத் துவங்கினோம். வாழ்க்கை சில தினங்கள் … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 4 பின்னூட்டங்கள்