Category Archives: பிரிவுக்குப் பின்!

மூன்று முடுச்சில் இறுகிய இதயங்களின் துடிப்பு..

பிரிவுக்குப் பின் – 42

இன்று தீபாவளி நம் ஊரில் இந்நேரம் பட்டாசெல்லாம் வெடித்து புதுத் துணியெல்லாம் உடுத்தியிருப்பீர்கள் – இங்கு என் மனசும் உன் நினைவுகளால் பட்டாசை வெடித்துக் கொண்டுதானிருக்கிறது; நீ அனுப்பிய எனக்கான புதுத் துணி – அலமாரியில் வேதனையின் கனமாய் கனத்துக் கொண்டிருக்க – அருகாமை நண்பர்கள் தந்த இனிப்புக் கூட – எப்படிக் கசக்கிறதோ தெரியவில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 41

முத்தங்கள் கொடுக்கப் படுகின்றன; தொடாமலேயே – இனிக்கிறதென்பதில் – தான் நீயிருக்கிறாய்!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 40

கல் முள் மீது நடந்திருந்தாலும் இத்தனை வலித்திருக்காது; உன் அழுத விழிகளின் மேல் கண்ணீராய் நடந்ததில் விதியென வலிக்கிறதடி வாழ்க்கை!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 39

நம்மைப் போன்ற காதலர்களிடம் – வாள் வேல் கத்திகள் ஒன்றுமே செய்வதில்லை; மெளனம் ஒன்றே வெட்டி வீழ்த்திவிடுகிறது

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 38

எனக்கு முத்தம் கொடுக்க உனக்குப் பிடிக்குமா? எனக்கு மிகப் பிடிக்கும் நான் கொடுத்துக் கொண்டு தானிருக்கிறேன் என்னிடம் பேசிவிட்டுச் சென்றதும் உன் இதயத்தை சற்று தொட்டு இதழ்களில் பதிந்த ஈரம் பார் அதில் – நானுமிருப்பேன்!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக