Category Archives: கவிதைகள்

பிரிவுக்குப் பின் – 65

வெகு நாட்களுக்குப் பிறகு – ஒரு சின்ன – மழைத் துளியில் உலகம் நனைந்த சந்தோஷம்; நீ இன்று குலுங்கி குலுங்கி சிரித்ததை தொலைபேசியில் கேட்டேன்!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 64

என் உயிரில் முள் குத்தியதாய் உணர்ந்த பொழுதே நினைத்தேன்; நீதான் அங்கு அழுகிறாய் என்று, எட்டித் – துடைப்பதற்குத் தான் – இந்தியாவும் குவைத்தும் அருகருகில் இல்லையே!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 62

கவிதைக்கு பரு பொருள் ஞானமல்ல; வலி என்பதை – நீயில்லாத கால இடைவெளியில் – கனத்து நிற்குமென் கவிதைகள் சொல்கின்றன!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 61

உனக்குப் பிடித்தமான உணவுகளை – நீயில்லாத பொழுதில் தின்கையில் கண்ணீரின் உப்பு அதிகமாக தான் கரிக்கிறது!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

89 வாழ்க்கையை படி!

நிறைய நிரபராதிகளின் வாதம் – சிறை கம்பிகளுக்கிடையே நின்று – உலகை வெறித்தாலும், வெளியே நிற்கும் குற்றவாளிகளுக்கு வெறும் – பணம் தரும் சிரிப்பு பணம் தீரும்போதே நின்றும் விடுகிறது! நிற்க, இங்கே சிறைக் கம்பிகளுக்கிடையே வீழ்ந்த ‘நியாயமே’ பேசப் பட வேண்டுமெனில் – நிரபராதிகள் காலத்தின் கேள்வியாய் சிறைகம்பிகளுக்கு மத்தியில் நில்லாமையை நீயும் நானும் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக