Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஹைக்கூ – 123

பயித்தியம் பிடிக்காத நாட்களை – இப்படித் தான் எழுத்துகள் மென்று தின்றுவிட்டு தன்னை கவிதை என்று அறிவித்துக் கொள்கிறது!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 122

ஒவ்வொரு பிணமாய் வீழும்போதும் மனிதன் தன்னை சாகாவரம் பெற்றதாகவே நினைத்துக் கொள்கிறான்; மரணம் மட்டும் நிகழாதிருக்குமே யானால் மனிதன் கொள்ளும் முதல் நபர் கடவுளாகவும் இருக்கலாம்!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 121

செரிப்பதற்கு இனிப்பும் ரசமும் சோடாவும் குடிப்பவனுக்கு பசிப்பவனை பற்றிய சிந்தனை அற்றுப் போன இடத்திலிருந்தே முளைத்துக் கொள்கிறது உலகின் அத்தனை போராட்டங்களும்!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

நித்தியானந்தா + நாம்

கிறுக்கு – மனோபாவத்தின் தந்திர வித்தைகளில் மறைந்த வக்கிரத்தை காவி மறைத்துக் கொண்ட தைரியத்தில் எதையோ பொய்யென்றும் எதையோ உண்மையென்றும் நம்பிவிட்ட கண்கட்டப் படாத பொதுமக்களின் குருட்டு நம்பிக்கையில் காலம் காலமாய் காம நெருப்பிட்டு உறங்கியவனின் மோக மெத்தையில் – எவர்வைக்கும் தீயும் அவன் தலைமுடியை கூட சுடவில்லை! ————————————–

Posted in கவிதைகள் | 8 பின்னூட்டங்கள்

இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்!

நிறைய அலமாரிகளில் பணம் அடுக்கப்பட்டு வயிறுகளில் பசி இறுகக் கட்டி பட்டில் ஆடையுடுத்தி மாற்றுப் புடவைக்கு பிச்சையெடுத்து விமானத்தில் நடுக்கடலில் பட்டப்பகல் – நட்டநடுத் தெருவில் வாகன நெரிசலுக்கிடையே திருமணம் நடத்தி முதிர்கன்னிகளை ஆங்காங்கே திரியவிட்டு பெண்களின் கற்பு பேசி விலைமகள்களுக்கு – வீடமைத்துக் கொடுத்து ஜனநாயக தேசமென மார்தட்டி – எடுத்ததற்கெல்லாம் ஜாதி கேட்டு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 2 பின்னூட்டங்கள்