Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஹைக்கூ – 100

காம விளக்கேற்றி தெருவில் வைத்தேன் இருண்டது வாழ்க்கை வேசி!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

அது வேலையை அது செய்தது; நீ என்ன செய்தாய்!

தெருவோரம் நடந்து சென்றேன் இன்று குடியரசு தினம் வாவென கொடி குத்திவிட அழைத்தார்கள். ஐயோ தேசிய கொடியாயிற்றே சற்று பொறுயென்று சொல்லிவிட்டு ஓடி – குளித்து சுத்த ஆடை அணிந்துவந்து தேசிய கொடியை – மார்பின் மேல் குத்திக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்; என் ஒற்றை வயது குழந்தை ஓடிவந்து – கொடியை தொட்டு தொட்டுப் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 4 பின்னூட்டங்கள்

சோறு கிடைத்தவனுக்கு கொடி பறக்கும் நாள்! (குடியரசு நாள்)

தெருவுக்கு தெரு டாஸ்மாக் வீட்டுக்கு வீடு தொலைகாட்சி மனிதனுக்கு மனிதன் அரசியல் கட்சி மண்ணாங்கட்டி பொழப்புக்கு வாய்க்கு நூறு இங்கிலீசு மரத்திற்கு மரம் சிரித்துக் கொண்டன; யாருக்குமே வெட்கமில்லை! படிப்பு முடியும் முன்னரே பாரின் படித்து முடித்தாலும் வெட்டி சோறு பாதி நாள் வேலைக்கு போனால் – மீதி நாள் பிகரு வெட்டும் சோம்பேறி சுயநலப் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 15 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 99

மனிதன் – நினைத்துக் கொண்டான் அவன் தலைக்குச் சூடிய பூவும், பூஜைக்கு வைத்த மலர்களும் பேருகொண்டதாய்; பூக்கள் – நினைத்துக் கொண்டன மனிதன் பறித்த பூவும் கிள்ளி – மாலையில் தொடுத்த மலர்களும் இறந்துப் போனதாய்!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 98

பூக்கள் ஆயிரம் பூக்கின்றன; ஒருசில பூக்களே நுகரப் படுகின்றன!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக