Category Archives: கவிதைகள்

ஹைக்கூ –92

தெருவோரம் பறக்கும் ஒரு – பட்டாம் பூச்சிக்கு இருக்கிறது போல் சுதந்திரம் எனக்கில்லை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ –91

பச்சை பச்சையாய் நிறைய மரங்கள் நிர்வாணம் புரிந்தும் வேறுபட்டுப் போகிறேன் நான் மரத்திடம்!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ –90

காலையில் நிறைய காகங்கள் கரைகின்றன இருட்டு விலகிக் கொள்கிறது நிறைய பேருக்கு – விடியவேயில்லை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

வெள்ளித்திரையில் வெளிவராத.. (சினிமா) (17)

உலக ரசனையை திரும்பிப் பார்க்க வைத்த முதல் சாதனை – பணத்தை கொட்டி – இறைத்து – வாரிய பிரம்மாண்ட வியாபாரம்! சதைக்கும் தோலுக்கும் முதலிடம் கொடுத்து – முடிவில் மனசாட்சி பற்றி பேசும் மனிதர்கள் குவிந்த நவீன சந்தை! உழைப்பை – திரைக்குப் பின் மறைத்துக் கொண்டு சொகுசாக வந்தவனுக்கு – கம்பள வரவேற்பும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

எப்பொழுதோ எடுத்து மாட்டிய (புகைப்படம்) (16)

காலத்தை நிகழ்வுகளை நினைவுகளாய் பதிந்துக்கொண்ட படம்! சிரித்த அழுத உணர்வுகளின் நகலாய் உயிர்பெற்றுள்ள – ‘என்றோ’ வான அந்த நாள்! திரும்பக் கிடைக்காத கடந்த காலத்தை – காலப் பெட்டகம் தனக்குள் குறித்துக் கொள்ளும் வித்தை! கோழையை கூட மிடுக்காகவும் – துடிப்பாகவும் காட்டும் போலி பிரதிபிம்பம்! கடவுளையும் காந்தியையும் நம் வீடுகளுக்கு கொண்டுவந்த விஞ்ஞான … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்