Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஹைக்கூ –70

எல்லோரும் சாமி சாமி என்றழைக்கிறார்கள் நானும் விட்டுவிட்டேன்; உள்ளிருக்கும் சாமியை கத்தியழைத்தாவது – வெளியே கொண்டு வரட்டும்! ——————————–

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –69

சுத்தமான நாற்பத்தோரு நாள் விரதத்தில் சாமியானேனோ இல்லையோ மனிதனானேன்! ——————————–

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –68

சாமியோ ஐயப்போ ஐயப்போ சாமியோ சாமி கந்தக தோம் தோம் ஐயப்ப கந்தக தோம் தோம் சாமி சரணம் ஐயப்ப சரணம்; சரணமெழுப்பிக் கொண்டு நடந்தது சாமி; சாமியின் கால்களில் ஒட்டிய அழுக்கு – விடவேயில்லை! ————————————-

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 10

மனிதன் தொலைத்த மனிதம் வெகுநேரமாய் பார்க்கிறேன் – ஒரு பட்டாம்பூச்சி இங்குமங்குமாய் சுற்றியது; எதையோ தேடுவதாய் நினைத்துக் கொண்டே பட்டாம்பூச்சியை பார்த்தேன்; என்ன பார்க்கிறாய் என்றது பட்டாம்பூச்சி, ஒன்றுமில்லை – நீ எதையோ தெடுகிறாயே என்றேன், உனக்காகத் தான் தேடுகிறேன், எங்கேனும் நீ தொலைத்த மனிதம் கிடைத்தால் – கொண்டு சென்று இலங்கையில் கொடுப்பேனென்றது! —————————- … Continue reading

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 9

காதல் உனக்கொரு பட்டாம்பூச்சியை பிடித்துத் தருகிறேன்; நீ – எனக்கொரு பட்டாம்பூச்சியை பிடித்துக் கோடு; இரண்டிற்கும் சம்மதமென்றால் நாமும் காதலிக்கலாம்! ———————————- வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக