Category Archives: கவிதைகள்

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 7

ஈழத்து வெளிக்குள்ளே; ஈழத்து முட்கம்பிகளுக்கு வெளியே ஒரு பட்டாம்பூச்சி பறந்து போனது.., ஒரு குழந்தை என்னிடம் வந்து – அந்த பட்டாம்பூச்சியை பிடித்துத் தரச் சொல்லிக் கேட்டது; அந்த பட்டாம்பூச்சிக்கு இருக்கும் சுதந்திரம் எனக்கில்லை யென அந்தக் குழந்தியிட மென்னால் சொல்லமுடிய வில்லை! ————————————— வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 8

பாவம் ஏழு வண்ணம் தானென்கிறார்கள்; உனக்கு மட்டுமெப்படி இத்தனை வண்ணமென்றேன் ஒரு பட்டாம்பூச்சியிடம்; உடனே ‘அணைகின்ற தீபம் சுடர்விட்டு எரியுமென்றது பட்டாம்பூச்சி! ——————— வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 6

நியாயம் அதோ ஒரு பட்டாம்பூச்சி பறக்கிறது.. பட்டாம்பூச்சியிடம் கேட்டேன் ‘எனக்கு ஒரே ஒரு இறக்கையை குடேன்.. பட்டாம்பூச்சி சொன்னது – ‘நானுனக்கு என் இறக்கைகளை தருகிறேன்; நீ யெனக்கு உன் கைகளை தருவாயா??? ———————— வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 5

நம்பிக்கை வாழ்கையில் ஜெயிப்பதற்கு ஒரு வழி சொல்லேனென்றேன் பட்டாம்பூச்சியிடம், பட்டாம்பூச்சி சொன்னது ‘பறந்துக் கொண்டே இரு எங்கோ ஒரு மூலையில் உனக்கான ஓரிடம் நிச்சயம் காத்திருக்குமென்று’ நானும் – பறந்துக் கொண்டேயிருக்கிறேன் எனக்கான இடமின்னும் – வரவே இல்லையே யென நினைக்கையில் – உலகம் பேசிக் கொண்டது – ‘அதிக தூரம் பறந்து சாதித்தவன் உலகிலேயே … Continue reading

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 4

கனவு என் – ஆயிரமாயிரம் வர்ணக் கனவுகள் பட்டாம் பூச்சியாகவே பறக்கின்றன; எங்கோ – எட்டா தூரத்தில்! ———————— வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக