Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 3

ஒரு ஆண் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்குமாமே; எனக்கும் கர்ப்பம் தரிக்க ஆசை! —————– வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 2

ஒருவேளை பட்டாம்பூச்சியை நான் – பிடிப்பதேயில்லை; ‘ஐயோ மனிதனென்று பட்டாம்பூச்சி பயந்து விட்டால்! ————————— வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 1

உன்னிடம் பேசுகையில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன; ஒன்றை கூட பிடிக்க முடியவில்லை, எல்லாம் – மனதிற்குள் மட்டும்! ————————– வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | 2 பின்னூட்டங்கள்

மேகப் பூக்களின் விளம்பரப் பலகை – வானவில்

ஏழு வண்ணத்தில் எண்ணிக் கோர்த்து ஏழைகள் பார்வை உடுத்தும் – பட்டாடை; வானவில்! வளைந்த புருவத்தில் பூமிக் காதலிக்கு வானம் காட்டும் வர்ண ஜாலம்; வானவில்! கல்வியறிவை கடன் வாங்காது இயற்கை நெய்த கணினி வித்தை; வானவில்! ஏற்றத் தாழ்வுகளின் ஏணி மிதித்து உலகின் பார்வைக்காய் பூட்டிவைத்த வான தேவதையின் வண்ண மாலை; வானவில்! காற்றில் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

எப்பொழுதேனும் கிடைத்துவிடும்; அது!

பேருந்தின் ஜன்னலோர இருக்கை ஒரு கனவாகவே என் காலம்; முதன் முறை அமரும் போது அப்பா பாதுகாப்புக் கருதி நடுவே அமரவைத்தார்; சற்று வளர்ந்துவிட்ட போது தம்பி கேட்பான் விட்டுவிடுவேன் இன்னும் சற்று வளர்ந்ததும் நண்பன் ‘எனக்குடா’ என்பான் விட்டுவிடுவேன் பிறகு காதலி வந்தாள் காதலியும் ஜன்னலோர இருக்கையும் கனவானது மனைவி வந்தாள் என்னால் மறுக்கவே … Continue reading

Posted in கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்