Category Archives: கவிதைகள்

தொலைபேசி

நிறைய இதயங்கள் இங்கு தான் உறைகின்றன; உலகின் தூரங்களை ஒரு சின்ன பொத்தான்களில் சுருக்கிவிடுகிறது தொலைபேசி! காதல் பேசியும் அரசியல் தகவலறிவித்தும் குடும்ப விவாதம் பகிர்ந்தும் வீட்டின் ஐந்தாம் சுவராய் அவசியப்பட்டுப் போனது தொலைபேசி! கால வேகத்திற்கு கையில் அடங்கி போயி; உலக விஸ்த்தாரிப்பை ஒரு சொடுக்கலில் அறிவித்து; மொபைல் ஃபோனாகவும் பிறந்தாலும் அலைபேசியென அர்த்தம் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

அப்பா என்றொரு வேதம்

அந்த கிழவனின் கண்களில் ஊடுருவித் தான் பிறக்கிறது – என் பார்வையும் பயணமும்! அவனின் இதயம் வழியாகத் தான் பேச ஆரம்பித்தன – என் நாடிகளும் நரம்புகளும்! அவன் உணர்வுகளிலிருந்து தெளிந்து வந்து தான் சுயேட்சைப் பெற்றது – என் மனசாட்சியும் லட்சியங்களும்! அவன் கொள்கையின் அழுத்தத்திலிருந்து தான் வளர்ந்தது – என் வீரமும் விவேகமும்! … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 1 பின்னூட்டம்

ஹைக்கூ –67

உன்னை அடித்த ஒரு அடியின் நுனியில் சிக்கிக் கொண்டு தவித்தது என்னுயிர்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –66

கிழிந்த சட்டை காதலனுக்கு காதலை சொல்லக் கூட ஐ லவ் யூ தான் இனிக்கிறது!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –65

ஊறுகாயும் வத்த மிளகாயும் பிரியாணியில் ஒழிந்து போனது விலை ஒரு நூறு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக