Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஹைக்கூ –64

சைக்கிள்.. கார்.. பஸ்சு.. ஏரோப்ளேன்.. எல்லாம் நிறைய போகிறது தமிழனை மிதித்துக் கொண்டு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –63

நெற்றியில் நெருப்பெரிகிறது, உடம்பு – வெற்றுத் துணையில் வேகிறது, மேலே விழும் கண்களால் உள்ளம் – காயம் கொள்கிறது, கழுத்திலில்லாத தாலிக்கு மட்டும் காசு கொடுக்க எத்தனையோ பேர் – வரிசையில் நிற்கிறார்கள்; நான் விதவை தானே!!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 62

புத்தகம் நிறைய பேசுகின்றன, கேட்பதற்கு – வாங்கும் பணத்தை விட படிக்கும் நேரமில்லாதவர்களே அதிகம்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

அணையா தீபம்; கேணல் கிட்டு

உயிரின் அடிநாதத்தில் எழுகிறது உனக்கான கூக்குரல் – குண்டு தொலைக்காத உன் தைரியத்தை ஒரு கப்பல் தகர்த்ததே சோகம்; தோல்வி நெருங்கிடாத உன் ராஜா பாட்டையில் – ஒரு வெற்றி குறுக்கிட்டு உயிர் தின்றதே வலிக்கும் ரணமானது; எதிரியின் உறக்கத்திலும் – உயிர் தைக்கும் மரணபயத்தை உன் வீரிய புயலின் வளர்ச்சி கொடுத்தும் – அதை … Continue reading

Posted in கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்

Happy New Year – தமிழன் தானென் உலகமெனில்

ஏய்.. பயங்கர வாத சமூகமே என் மீது காரி உமிழ்வாய் என் கருவருப்பாய் என்னினம் பங்கமுற்று அழிய கொல்லி ஈட்டுவாய் நான் எள்ளி நகைக்கவா????? ஏனென்று கேட்டால் என்னை தீவிரவாதி என்கிறாய்; நீ சுட்டுப் பொசுக்குவாய் புதைகுழிக்குள் உயிரோடு புதைப்பாய் மலை போல் என் மனிதர்களை கொட்டி எரிப்பாய் வெறி வந்தால் வீடேறி கற்பழிப்பாய் என் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | 4 பின்னூட்டங்கள்