Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

வேண்டாத கவிதை

காலக் கழிவுகளில் மிச்சமாய் மீந்ததெல்லாம் நினைவுகளும்; தடங்களுமே; நாம் விட்டுச் சென்ற தடங்கள் மட்டுமே – நாளை நமக்கான வரலாற்றை பேசுகிறது; நாமெல்லாம் இன்றினை நோக்கி வாழ்வதாகவே நினைத்துக் கொள்கிறோம், நிறைய பேருக்கு தெரிவதேயில்லை – நாளைய வரலாற்றை தான் நாம் இன்றே எழுதுகிறோமென; ஒரு வரலாற்றை புரட்டிப் போடவேண்டிய – பாதி தொலைவில் தான் … Continue reading

Posted in சிலல்றை சப்தங்கள் | பின்னூட்டமொன்றை இடுக

நீ நின்று கொன்ற இதயம்

அன்பே..உலகம் தொட்டிடாத வார்த்தையொன்று – தொண்டை குழி உடைத்து உனக்காய் கவிதை புனைய தவிக்கிறது; இதயம் உடைக்கும் பார்வையேந்தி – ஈரம் சுரக்காத உன் காதலுக்கு கடவுள் கூட – கர்வியென பெயர் சூட்டலாம்; துடிக்கும் உயிர் நாதமெல்லாம் நீயே நீயே உயிர் கொண்டிருக்க எதை கொண்டு என் காதலை நான் தொல்வியென்பேன் சொல்லடி; நீ … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

புறப்படு பெண்ணே; போர் கொள்!

ஆடிக் காற்றிலே அம்மா கும்மியடி ஆயிரம் பேரையும் சொல்லி அடி! சட்டமும் பட்டமும் செய்து முடி இனி பெண்ணென்றால் யாரென்று காட்டுங்கடி! அடுப்பு மூலையில் சோறை ஆக்கிக்கடி அதை நிலாவிலே கொண்டு போய் தின்னுக்கடி! அச்சமும் நாணமும் தூர எறி – பெண்ணே ஆணுக்கும் பெண்ணுக்கும் அதை ஒன்றாக்கடி! ஆட்டமும் பாட்டமும் போதுமடி – இனி … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

அவளின் மவுனம்

காற்றில் – இலை – மரம் – செடி – கொடி மேகம் – என எல்லாம் அசைகிறது; நீ – பேசாதிருந்த மவுனத்தில் தான் – நானும் என் இதயமும் – சற்று கூடுதலாக நகர்ந்து மரணம் வரை சென்றுவிட்டோம்! ———————————- வித்யாசாகர்

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

காலம் விழுங்கிவிட்ட வரலாறு..

ஒரு கால தவம் பூண்டெழுந்த வரலாறுகளை சுமந்துக் கொண்டு தான் செல்கின்றன கடக்கும் பொழுதுகளெல்லாம்; ஒரு போர் முடிவடைந்ததாய் அறிவித்த புள்ளி – பூகம்பம் மூச்சடக்கிக் கொண்டு பூமி பிளவு நின்றுவிட்ட பொழுது – கடல் கொந்தளிப்பு அடங்கி கடல்கோல் நின்ற கணம் – புயல் வெள்ளத்தால் உயிர் கொன்று குவித்த காற்றழுத்தம் தன்னை குறைத்துக் … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக