Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

தாம்பத்யம்

மிக அன்பும் ஈர்ப்பும் உள்ள கணவன் மனைவிகளிடையே தோற்றுத் தான் போகின்றன – சில கட்டுப் பாடும் விரதங்களும்! —————————————— வித்யாசாகர்

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

அது அப்படித் தான்

அவள் மெல்லிய உலகத்தின் – சாயலாகவே வயம் கொள்கிறாள்; எனக்கோ – உலகம் வெகு கரடுமுரடாகவே தெரிகிறது; இரண்டுபேருக்கும் மத்தியில் எப்படி அரும்புகிறதோ காதல்! —————————————– வித்யாசாகர் 

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

இரவிற்கும் வெளிச்சமுண்டு ……

இரவும் பகலும் உனக்கும் எனக்குமாக தான் விடிகிறது  எந்த பொழுதுகளும் யார் தோல்விகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளவதில்லை   நம் பிறப்பிக்கும் இறப்பிற்குமிடையே நாமே போராளிகள் வாழ்க்கை மரண காம்புகளில் பூக்களாய் மட்டுமே பூப்பதில்லை ….உதிர்வதற்கு   உன்னையும் என்னையும் போல வலிகளின் வடுக்களோடு தான் சாதனை போர் கொள்கிறது  – வாழ்கையும், வா…நீயும் ஒரு சபதம் … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக