இரவிற்கும் வெளிச்சமுண்டு ……

இரவும் பகலும்

உனக்கும் எனக்குமாக தான் விடிகிறது 

எந்த பொழுதுகளும் யார் தோல்விகளுக்கும்

பொறுப்பேற்றுக் கொள்ளவதில்லை

 

நம் பிறப்பிக்கும் இறப்பிற்குமிடையே

நாமே போராளிகள்

வாழ்க்கை மரண காம்புகளில்

பூக்களாய் மட்டுமே பூப்பதில்லை ….உதிர்வதற்கு

 

உன்னையும் என்னையும் போல வலிகளின்

வடுக்களோடு தான் சாதனை போர் கொள்கிறது

 – வாழ்கையும்,

வா…நீயும் ஒரு சபதம் கொள்

நீ தொலைத்த உறக்கங்களை

சாதனை பட்டியல்களாக்கு

 

தோல்விஉன்னை எரித்த  நேரங்களை கூட

வெற்றி உன் வாசல் வர மாற்றி அமை !

ஒவ்வொரு நொடியும் – உனக்காக மட்டுமே

நொடித்துக் கொண்டிருப்பதாய் நம்பு !

 

வாழ்வின் ஒரு நாளில் – நிச்சயம் எதையேனும்

சாதிப்பேனென்று  மட்டும் சபதம் கொள்

உணவு  உறக்கம்  மற தவறில்லை

இரவின்  துளிகள்  விழுங்கும் உன் வெற்றிகளை

உடைத்துக்கொண்டு மேலே  வா ….

காலம் உன் பெயரையும் என் பெயரையும்

சரித்திரமாக சொல்லத்தான் காத்துக் கிடக்கின்றது…….

                                                                                           வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக