Category Archives: கவிதைகள்

தென்றல் வீசும் தெருவொன்றில் ஞானத் தீயாய் எரிந்தவன்.. (கவியரங்கக் கவிதை)

தமிழ் வணக்கம் அ ஆ’ வில் உயிரூட்டி அமுது தமிழை உரமாக்கி இலக்கிய இலக்கணத் தெருவெங்கும் வாழ்தலின் ரசங்கூட்டி அடிக்கு அடி மொழியாலே உலகப் பண்பு வளர்த்த தமிழ்மண்ணே; மனித மாண்பூறிய உன்தாய்மடியில் எனை தமிழனாய்ப் பெற்றெடுக்க வரம் தந்த மொழியே; தமிழே என் முதல் வணக்கம்!! ——————————————————————— அவை வணக்கம் பசிக்கு தமிழ்தந்து படிக்க … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கல்லும் கடவுளும்..

மூடிய கண்களின் ஆழத்தில் பளிச்செனத் தெரிகிறதந்த வெளிச்சம்; வெளிச்சத்தை உதறிப் போட்டு எழுந்தேன் கடவுள் கீழே கிடந்தார்!! பாவம் கடவுளென தூக்க நினைத்தேன் – விழுந்தவர்கள் பலர் நினைவில் வர விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன் உன் கோபம் நியாயம் தான் உன்னை இப்படி படைத்தது என் குற்றம் தானே என்றார் கடவுள் உளறாதே நிறுத்து உன்னை … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

47, என் கவிதை பிறந்ததன் காரணம் கேளுங்கள்..

இதயம் இடிந்துவிழுந்த இடத்தில் பிறக்கிறது கவிதை, ரணமாய் வலிக்க வலிக்க அழுதகணம் வடிக்கக் கேட்கிறதென் கவிதை; காதல் சொல்லிதரப்படாத பிஞ்சுமனம் வெம்பியழுத தருணத்தில் கட்டவிழ்கிறது கவிதை, காதல் தவறென்று மட்டும் சித்தரித்த கவலையில் கதறி கதறி கிறுக்கும் கோடுகளில் எழுதக்  கேட்கிறதென் கவிதை; இடைவெளிவிட்டு வளர்த்தப் பண்பின் தெளிவுறா மனோபலத்தில் குற்றவாளியைத் தேடி அலைகிறது கவிதை, … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

51, வலிக்க வலிக்க வருகிறது மே’ பதினெட்டு..

அத்தனை படபடப்பு அன்று இதயம் முழுதும் இழுத்துக் கொண்டு ஓடும் ரயில்வண்டியென பற்றி எரிந்துக்கொண்டு ஓடிய அந்த உணர்வுகளை எங்கே தொலைத்தோம்? அழுது புரண்டு உயிர்முட்டி வீழ்ந்த தருணங்களில் ஒவ்வொரு முகத்தையாய் எடுத்து எடுத்து பார்த்து அழுதோமே – எங்கே அந்த அழையின் விம்மல் அடங்கிப் போச்சோ? உயிர் அறுந்து கிடந்த பிணமெரித்த வாடை உணர்வைப் … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

46, தங்கத் தமிழரின் தங்க முகம்..

தங்கத் தமிழரின் தங்க முகம், அது தங்கம் சார் அசிங்கமுகம்; தங்கம் தங்கமென்று நெஞ்சுவிம்ம – மனிதர் மனிதரைக் கொல்லும் கோர முகம்; நடிகையின் வெற்றுடம்பை’ உதட்டால் மூடும் தங்கம் அவன் கிரீடம் கூட – மதுரை ஆதினத் தங்கம், சிறைக் கம்பி எண்ணும் கையில் அவன் தொடுவதெல்லாம் நம்ம தங்கம்.. நித்யானந்தா என்று சொன்னால் … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்